வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மண்ணெண்ணையின் எரியும் திறனை சோதிக்கவே அவர் தீக்குளித்தார் என்பது தெரியவருகிறது. ஆக, ஆகத்தான்.
மதுரை:மதுரையில் கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தீக்குளித்த தி.மு.க., பிரமுகர் கணேசன், 73, இறந்தார்.மதுரை மானகிரியை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் காலை மூலக்கரையில் மாநகர தி.மு.க., செயலர் தளபதியை அவருடைய வீட்டில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின், வெளியே வந்த அவர், வீடு அருகே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரிடம் மாஜிஸ்திரேட், போலீஸ் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.தி.மு.க.,வினர் கூறியதாவது:அவர் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், தி.மு.க., தொழிற்சங்க கவுரவ நிர்வாகியாக இருந்தார். தீக்குளிப்பதற்கு முன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.அதில், நிர்வாகிகள் சிலரை குறைகூறி, அவர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். அதையடுத்தே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறந்தது குறித்து, போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். ஆனாலும், போலீசார் இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரித்தால், ரகசிய தகவல்கள் நிறைய வெளியாகலாம். இவ்வாறு கூறினர்.
விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மண்ணெண்ணையின் எரியும் திறனை சோதிக்கவே அவர் தீக்குளித்தார் என்பது தெரியவருகிறது. ஆக, ஆகத்தான்.