உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., முதலில் ஆதரிப்பதும் பின்வாங்குவதும் வாடிக்கை

தி.மு.க., முதலில் ஆதரிப்பதும் பின்வாங்குவதும் வாடிக்கை

தமிழகத்துக்கு, மத்திய அரசு தரவேண்டிய நிதியை கொடுங்கள் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினால் உடனே நிதி வந்துவிடும். அதை செய்வதை விட்டுவிட்டு, வெட்டி வீராப்பு பேசுகிறார் கல்வி அமைச்சர் மகேஷ். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மின் கட்டணம்கூட செலுத்த முடியவில்லை. ஆசிரியர்களின் சொந்த பணத்தை செலுத்தும் நிலை உள்ளது. தி.மு.க.,வை பொறுத்தவரை கச்சத் தீவு தாரைவார்ப்பு, காவிரி பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, டங்ஸ்டன் திட்டம், தற்போது புதிய கல்விக் கொள்கைக்கும் ஒப்புதல் தெரிவித்தது போன்று, பல விஷயங்களில் முன்கூட்டியே சம்மதம் தெரிவித்து விட்டு, பின், அதிலிருந்து பின்வாங்குவதை வாடிக்கையாக்கி உள்ளனர். இதை, மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இரட்டை இலையை வைத்திருப்பவர்தான் உண்மையான அ.தி.மு.க., என, தொண்டர்கள் நினைக்கின்றனர். தற்போதைய நிலை நீடித்தால், தேர்தலுக்குப் பின், தொண்டர்கள் ஏமாற்றம் அடைவர். தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை