உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,

வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா 500 ஓட்டுகள் கட்டாயம் வாங்குவதை உறுதி செய்ய, பெண்களுக்கு 'குக்கர், தவா' உள்ளிட்ட பரிசுகளை தொடர்ந்து வழங்குமாறு, கட்சியினருக்கு தி.மு.க., நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வரும், 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை முழுவீச்சில் துவங்கியுள்ளது.தமிழகம் முழுதும், 234 சட்டசபை தொகுதிகளிலும், 68,000 ஓட்டுச்சாவடிகள் எனும் 'பூத்'கள் உள்ளன. தொகுதிக்கு சராசரியாக, 290 - 300 பூத்கள் உள்ளன. ஒரு பூத்திற்கு, 750 - 1,500 வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத்திலும், கட்சிக்கு 500 ஓட்டுகள் கட்டாயம் கிடைத்தால், 1.50 லட்சம் ஓட்டுகள் உறுதியாக கிடைக்கும். இன்னும் கூடுதலாக 20,000 ஓட்டுகள் வாங்கி விட்டால் வெற்றி பெற்று விடலாம்.பெண்கள் ஓட்டுகளை மாற்றிப் போட மாட்டார்கள். எனவே, இந்த கணக்கை மனதில் வைத்து, சட்டசபை தேர்தல் வரும் வரை, ஒவ்வொரு பூத்திலும், 500 வாக்காளர்களுக்கு, 'குக்கர், தவா, ஹாட்பாக்ஸ்' என, சமையலுக்கு பயன்படும் பொருட்களை பரிசாக தொடர்ந்து வழங்குமாறு, கட்சியினரை மூத்த தலைவர்கள் அறிவுறுத்திஉள்ளனர்.அமைச்சர் உதயநிதி தொகுதியான சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று, 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. வரும் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், ஜூன் 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில், பூத் வாரியாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Bhaskaran
பிப் 24, 2025 14:54

விலை போகும் வாக்காளர்கள் இருக்கும்வரை இது தொடர்கதை


Alagusundram Kulasekaran
பிப் 24, 2025 14:33

தாய்மார்களே கிடைப்பதை வாங்கிவிட்டு வாக்களை நல்ல வேட்பாளராக பார்த்து எந்த கட்சி நல்ல கட்சி எது குடும்ப கட்சி உங்கள் பிள்ளை கோளின் எதிர் காலம் உங்கள் கையில்


Tamilselvan Radhakrishnan
பிப் 24, 2025 08:19

பிச்சை வாங்குற திராவிட நாய்களுக்கு அறிவு இருக்கனும்... தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கெடுக்குறோமே என்று... ச்சீ...


Karthik
பிப் 23, 2025 19:00

குக்கர் தவா எனும் திருவோடு கொடுத்து, வோட்டு பிச்சை எடுக்க கட்டுமர கட்சி தயார்.


Laddoo
பிப் 23, 2025 15:07

தவ்வா குக்கர வாங்கி குவிக்க பிண்டங்கள் தயார்.


S.L.Narasimman
பிப் 23, 2025 13:55

அப்படியென்றால் வரும் தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் நின்றால் ஓட்டுக்களை அள்ளலாம்.


R Vijayaraghavan
பிப் 23, 2025 13:42

Yes central govt is spineless but people in tamil nadu are double spine, I think


Anantharaman Srinivasan
பிப் 23, 2025 13:24

இவர்களை பிடித்து தண்டிக்க முடியாத கையாலாகாத தேர்தல் கமிஷன் நாட்டில் எதற்கு..?


Visu
பிப் 23, 2025 12:56

கொடுக்கறதுதான் கொடுக்குறீங்ஙங திருவோடா குடுத்துட்டா உபயோகப்படும்


Karthik
பிப் 23, 2025 16:53

உண்மையில் நீங்கள் சொன்ன திருவோடு தான் கொடுக்கிறார்கள் - ஆனால் வேறு பெயரில். சற்று யோசித்து பாருங்கள்.. கைப்பிடி இல்லாத தவாவும், கைப்பிடி & மூடி இல்லாத குக்கரும் எப்படி இருக்குமென்று?? புறிந்தவர்கள் பிஸ்தா ஹி.. ஹி..ஹீ..


Indhuindian
பிப் 23, 2025 12:46

எந்த காலத்துலே இருக்கீங்க அந்த காலம்லாம் மலையேறி போச்சு இப்போ வேண்டியது மின்சார ஸ்கு ட்டர், ஆப்பிள் ஐ போன், சின்னதா ஸ்விப்ட் இல்லேன்னா ஐ 10 வண்டி. நாங்கதான் நாளா முன்னேறிட்டோமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை