உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

சென்னை: '18 கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=inhysgqq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும். கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அமைச்சர் விளக்கம்

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த விளக்கத்தில், ''எந்த கிளைச் சிறையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை; கிளை சிறைகள் பழுது பார்க்கப்பட்டு அவற்றை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:57

நிர்வாக அறிவு எஸ்ட்ரா வாக இருந்தால் தலைமை செயலகம் அனுப்பவும், அல்லது லாரியில் அனுப்பவேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்தவும். தலைமை செயலகத்தில் ஐ எ ஸ் அதிகாரிகள் தான் நிர்வாகத்தில், உங்களை போல முன்னாள் ஐ பி ஸ் அதிகாரிகள் இல்லை.


Kesavan
ஜூலை 30, 2024 06:30

என்னது அறிவை பற்றியெல்லாம் அண்ணாமலை பேசுவதா காமெடியா இருக்குப்பா


Vijayakumar Srinivasan
ஜூலை 29, 2024 22:15

மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு பலவருடங்கள் ஆகிவிட்டன


pmsamy
ஜூலை 29, 2024 17:48

அண்ணாமலைக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2024 16:41

இதன் உண்மையான விளக்கம் - இங்கே யாருங்க ஜெயிலில் இருக்கவேண்டிய எல்லோரும் இப்போ திமுகவில் உள்ளார்கள் ஆகவே இந்த சிறை நிரம்பபோவது இல்லை ஆகவே இதை மூடுகின்றோம் -


Lakshminarayanan
ஜூலை 29, 2024 16:24

அதுதான் மக்கள் வேண்டவே வேண்டாம் என்று பஜக வைத் துடைத்து எறிந்து விட்டார்களே ஏதானும் படித்த படிப்புக்கு நல்ல வேலையா பார்த்து ஸெட்டில் ஆகுங்க .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 29, 2024 16:22

திமுகவில் இல்லவேயில்லை என்று சொன்னால் கண்டிப்பாக ஏதோ ஒன்று அதனுள் இருக்கும். இது திமுக காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை.


Kaleel MAJEED
ஜூலை 29, 2024 15:05

எதையும் தீர விசாரிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உளறுவாயன் உளறுகிறான் இந்த வைத்தியத்தை ஏர்வாடி க்கு அனுப்பனும்


Duruvesan
ஜூலை 29, 2024 21:08

மதரச டிகிரி உன்னை விட படிச்சி UPSC பாஸ் பண்ணவன் புத்தி சாலி


rajan
ஜூலை 29, 2024 14:15

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம் 360 டிகிரி எதிர்மறை திசை என்று சொன்ன அண்ணாமலையின் அடிப்படை அறிவு எப்படிப்பட்டது


MP.K
ஜூலை 29, 2024 13:58

கண்ணியம் இல்லாத விமர்சனங்கள் காகித பூக்கள் தானே


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை