உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு: அரசு ஆலோசனை

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு: அரசு ஆலோசனை

சென்னை:தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இந்த சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார். முதல்வரின் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயசந்திரன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி