உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வரை நாட்டில் தேடுங்க; வீட்டில் தேடாதீங்க; முதல்வருக்கு சொல்கிறார் சீமான்

துணை முதல்வரை நாட்டில் தேடுங்க; வீட்டில் தேடாதீங்க; முதல்வருக்கு சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'முதல்வர் வெளிநாடு செல்லும்போது, மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மோதல்

சீமானுக்கும், திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக வருண்குமார் அறிவித்தார். இதனால், இருவரிடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பரஸ்பரமாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் ஸ்டேடஸ்

இதனிடையே, 'நான் வகிக்கும் ஐ.பி.எஸ்., மற்றும் எஸ்.பி., பதவி என்பது திரள்நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம், வியர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாங்கிய வேலை,' என்று சீமானை மறைமுகமாக விமர்சித்து ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார் போட்ட வாட்ஸ்அப் பதவி வைரலாகியது.

தி.மு.க., ஐ.டி., விங்

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், வருண்குமாரை விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:- திருச்சி எஸ்.பி.,யாக வருண்குமாரும், அவரது மனைவி பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையிலும் எஸ்.பி.,யாக பணியாற்றுவது எப்படி, நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. அப்படியில்லையா, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க., ஐ.டி., விங்கில் போய் சேர்ந்துக்கோங்க. உங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் என் கட்சிக்காரர் ஆயிடுவாங்களா? சாட்டை துரைமுருகன் கைதின் போது, அவரது செல்போனில் இடம்பெற்றிருந்த ஆடியோவை போலீசார் வெளியிட்டது ஏன்?

நிராகரித்தது ஏன்?

முத்தமிழ் முருகன் மாநாடு நான் இல்லையென்றால் நடந்திருக்காது. தமிழர்களுக்கு இங்க வேலை வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் போது, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சைலேந்திரபாபுவை நிராகரித்து விட்டு, கோவையில் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பணிபுரிந்த பிரபாகரை கவர்னர் நியமித்தது ஏன்?

கூட்டணி

எங்கள் கோட்பாடு, கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வருபவர்களிடம் தான் கூட்டணி. யாருடனும் கூட்டணி சேராததால் தான் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். அப்படியிருக்கும் போது, அவர்களை ஏமாற்ற முடியுமா? நடிகர் விஜய் கூட்டணி குறித்து அவர் முடிவெடுப்பார். தம்பி விஜய்க்கு சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். அதை இங்கு சொல்ல முடியாது.

கார் பந்தயம்

கார் பந்தயம் நடத்துவதற்கு சோழபுரத்தில் இடமிருக்கும் போது, மக்கள் பயன்படுத்தும் சாலையில் நடத்துவது ஏன்? ரூ.50 கோடி செலவு பண்ணுவதற்கு பதிலாக குடிசையில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம்.

முதலீடு

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் சிறக்க வாழ்த்துக்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். ஏற்கனவே, ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்திருப்பதாக சொல்கிறார்கள். உண்மையில் வந்திருக்கிறதா...? முதலீடு வந்திருந்தால் மின்கட்டணம் எல்லாம் எதுக்கு அதிகரிக்கிறார்கள். சாதாரண ஒன்றையே விளம்பரம் செய்யும் தி.மு.க., 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்திருந்தால், விளம்பரம் செய்யாமலா இருந்திருப்பார்கள்? உண்மையை பேசிட்டு போங்க.

இடைக்கால முதல்வர்

அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினியைப் பற்றி நகைச்சுவையாகத்தான் பேசியுள்ளார். அதனை சீரியஸாக எடுக்கக் கூடாது. கருணாநிதிக்கு விசுவாசமாக இருந்த துரைமுருகனை, முதல்வர் வெளிநாடு சென்று வரும் வரை, இடைக்கால முதல்வராக நியமிக்கலாம். நாட்டில் இல்லாத தலைவர் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருந்தால் அது ரொம்ப கடினம். முதல்வரே செயல்படவில்லை; அவர் இல்லாத போது மட்டும் இவர்கள் செயல்படுவார்களா? சாதாரண தொண்டனாக இருந்து கட்சியின் தலைவராக உயர்ந்த இ.பி.எஸ்.,ஸை அவமதித்து அண்ணாமலை பேசியது தவறு, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mr Krish Tamilnadu
ஆக 26, 2024 22:49

சும்மா இருந்த சங்கை ஊதியிட்டேயே பரட்டை.


Ramesh Sargam
ஆக 26, 2024 21:39

துணை முதல்வர் பதவி எதற்கு? யாரும் எந்த வேலையையும் செய்யப்போவதில்லை அரசியல் செய்வதைவிட்டு? முதல்வராக இருக்கட்டும், துணை முதல்வராக இருக்கட்டும் அல்லது மற்ற மந்திரிகளாக இருக்கட்டும், அவள்கள் கீழ் பணிபுரியும் IAS போன்ற நன்கு படித்த செயலாளர்கள்தான் எல்லா பணிகளையும் செய்வது. அப்புறம் எதற்கு துணை முதல்வர் பதவி?


sridhar
ஆக 26, 2024 20:51

உன் மனைவிக்கு ஏன் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்தீர் ?


Bharathi
ஆக 26, 2024 19:01

Adutha savukku Sankar ready


Kumar Kumzi
ஆக 26, 2024 18:56

அதெப்படி மிஸ்டர் சைமன் தலைவர் பதவி துணை முதல்வர் பதவி எல்லாம் எங்க குடும்ப சொத்து


ஆரூர் ரங்
ஆக 26, 2024 18:25

சமத்துவம் சமூகநீதி பற்றிப் பேசும் கட்சிகள் குறைந்தது கால்வாசி மாவட்டச் செயலாளர் பதவிகளை பட்டியலின மக்களுக்கும் அதில் பாதியை அதே பிரிவு பெண்களுக்கும் கொடுக்கணும் . செய்வீர்களா?


rama adhavan
ஆக 26, 2024 20:41

18% ஆவது கொடுக்கலாம்..


sankaranarayanan
ஆக 26, 2024 17:53

நாட்டிற்கு துணை முதல்வர் உத்தாயா வீட்டிற்கு துணைமுதல்வர் துறைஅன்னா


சமூக நல விரும்பி
ஆக 26, 2024 17:34

நாட்டில் தேடும் முதல்வர் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஒத்து வர மாட்டார்கள். அதனால் தான் இவர்கள் வீட்டில் தேடுகிறார்கள். நம் தலை எழுத்து நமக்கு வாய்க்கும் முதல்வர் மக்கள் குடும்பத்தை கவனிக்காமல் அவர்கள் குடும்பத்தை மட்டும் கவனிக்கிறார்கள்


MADHAVAN
ஆக 26, 2024 17:32

ivanai mathri oru poipesum thalaivarai மக்கள் hthillai


நிக்கோல்தாம்சன்
ஆக 26, 2024 17:20

ஐயோ ஐயோ புல்லரிக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை