உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,000 லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு சிறை

2,000 லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு சிறை

திருவள்ளூர்: மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.திருவள்ளூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 48. இவர், 2014ல் புதிய வீட்டிற்கான மின் இணைப்புக்காக, அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுகுமார், 52, லஞ்சமாக 2000 ரூபாய் கேட்டார். இதுபற்றி, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஜெயகுமார் புகார் அளித்தார். அவர்களது அறிவுரைப்படி, சுகுமாரிடம் 2,000 ரூபாய் வழங்கினார் ஜெயகுமார். அப்போது, சுகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் சிறப்பு நீதிபதி மோகன், லஞ்சம் வாங்கிய சுகுமாருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். உடன், சென்னை புழல் சிறையில் சுகுமார் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை