உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி: மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஷியாம் பிரபாகர்,35; இவர், வீட்டு மின் இணைப்பு வேண்டி கச்சிராயபாளையம் இளமின் வாரிய அலுவலகத்ததில் விண்ணப்பித்தார். அதன்பபேரில் ஷியாம் பிரபாகர் வீட்டை கள ஆய்வு செய்து மின்வாரிய வணிக உதவியாளர் வெங்கடாசலம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்த ஷியாம் பிரபாகர், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஷியாம் பிரபாகர் நேற்று, மின்வாரி வணிக உதவியாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய வெங்கடாசலத்தை, டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 10, 2024 16:34

கோடிகளில் 'வாங்கும்' கமிஷன், கட்டிங் இதெல்லாம் கிடைக்க, மலையைக் கெல்லி எலியைப் பிடித்த பெருமைதான் இது இதே வாரிய அதிகாரிகள், அமைச்சர் வீட்டுப்பக்கமெல்லாம் கண் திரும்பாதே


Ramesh Sargam
ஆக 10, 2024 12:05

அப்பா lanjam முற்றிலும் தமிழகத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனி நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம்.


Ramesh Sargam
ஆக 10, 2024 12:00

தலை முதல் கொண்டு, கடைசி ஊழியன் வரை லஞ்சம் வாங்குவது எல்லோருக்கும் தெரியும். ஒரு துறையில் ஒரு ஊழியரை லஞ்சம் வாங்கியதாத கைது செய்தால் லஞ்சம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் இல்லை. லஞ்சம் வாங்கும் எல்லோரையும் கைது செய்யுங்கள், தண்டனை கொடுங்கள். பிறக்க லஞ்சம் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக மார்தட்டி பேசலாம். விழா எடுத்து கொண்டாடலாம்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ