உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

கம்பம் : மேகமலை புலிகள் காப்பகத்தில் நேற்று யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது. 68 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 168 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.யானைகள் கணக்கெடுப்பு ஒரே சமயத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு இப்பணி நேற்று காலை துவங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்க உள்ளது. மேகமலை வனப்பகுதிகள் 68 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 168 பேர் இதில் களம் இறங்கியுள்ளனர்.நீர்நிலை அருகில் உள்ள யானை கால் தடங்கள் பதிவு செய்யப்படுகிறது. இரு மாநிலங்கள் தங்களின் கணக்கெடுப்பு விபரங்களை பரஸ்பரமாக மாற்றி சரிபார்ப்பார். ஒரே யானை இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இடம் பெற்று விடக் கூடாது என்பதற்காக இதுமேற்கொள்ளப்படுகிறது. 2023 ல் நடந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் 2961 யானைகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேகமலை புலிகள் காப்பக பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சவாலாக இருக்கும்.மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் கூறுகையில் இக் கணக்கெடுப்பில் 168 பேர் ஈடுபட்டுள்ளனர். 10 பேர் மட்டும் இப்பணியில் முன் அனுபவம் உள்ள தன்னார்வலர்கள், மற்ற அனைவரும் வனப் பணியாளர்களாகும். திட்டமிட்டபடி வெற்றிகரமாக இது நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ