உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை சுட்டு கொலை; துப்பாக்கி செய்பவர் கைது

யானை சுட்டு கொலை; துப்பாக்கி செய்பவர் கைது

ஓசூர் : தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகத்தில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, உடல் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது. யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது தெரிந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் கொடகரை கிராமத்தில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கூலித்தொழிலாளி மல்லன், 36, என்பவர் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி செய்ய உபகரணங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. வனத்துறையினர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அஞ்செட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.அவர் தான், யானையை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் அல்லது அவரிடம் வாங்கிய உபகரணங்களை வைத்து யாரேனும் சுட்டு கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ