உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சென்னை: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .இந்நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும்,அயோத்தி குப்பம் வீரமணியை சுட்டு கொன்றதிலும் பேர் வாங்கியவர் வெள்ளத்துரை. இவர் செய்த என்கவுன்டரால் வேகமாக பதவி உயர்வு பெற்று தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். 2013 ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லாக்கப் மரண புகாரில் வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளராக உள்ள அமுதா அறிவித்த சஸ்பெண்ட் உத்தரவு தன்னிச்சையாக எடுத்த முடிவு என புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு உள்துறை செயலாளர் அமுதாவை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்துரை சஸ்பெண்ட்டிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Raa
ஜூன் 07, 2024 12:07

ஆக சஸ்பேண்ட் செய்வதற்கும் அதை நீக்குவதற்கும் ஒரு அளவீடும் கிடையாது... புடிக்கவில்லை என்றால் சஸ்பேண்ட் பண்ணிவிடலாம்... பிடித்தால் நீக்கிவிடலாம். நல்ல அட்மினிஸ்டரேஷன் டா.


jayvee
ஜூன் 01, 2024 08:18

இவர் கடைசியாக வகித்த பதவியே ஒரு தண்டனை பதவி தான்.. இவ்வளவு திறமையான அதிகாரிக்கு உரிய இடத்தில வைத்திருந்தால் பல அரசியல் ரௌடிகள் காணாமல் போயிருப்பார்கள் .


Kundalakesi
மே 31, 2024 15:52

தவறு செய்தவருக்கு பதவி உயர்வு அளித்தவருக்கு என்ன தண்டனை தரலாம்


Vivek
மே 31, 2024 14:13

ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ஸ் செய்தல் கூடாது என சமீபத்தில் கூட மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..vide Madurai High Judgement WP.MD.No. 26571 of 2022& WMP.MD.No.20763 , 20765 of 2022 in K.Saravanan vs School Education..for Information to viewers.


Vivek
மே 31, 2024 14:08

பணி ஓய்வு பெறும் நாள் அன்று சஸ்பென்ட் செய்தல் கூடாது என்று பல நீதிமன்ற தீர்ப்பு உள்ளன.சமீத்தில் கூட உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது.தகவலுக்காக.வ்ப் மது நோ.26571 of 2022 & WMP.MD.No.20763 &20765 of 2022 of மதுரை ஹை court


தமிழ்வேள்
மே 31, 2024 13:07

தன்னுடைய திராவிட எஜமானர்களுக்காக [இரண்டு திருட்டு திராவிஷங்களும் அடக்கம் ] அநியாய கொலைகளை என்கவுண்டர் என்ற பெயரில் செய்த மனசாட்சியற்ற ஒரு நபர் ...எஜமானர்களுக்கு இனி இவரது அடிமை சேவகம் தேவையில்லை என்பதால் ,கழற்றி விட்டு விட்டார்கள் ...ஆனால் இவரது இறுதி நாட்கள் அமைதியானதாகவோ , கவுரவமானதாகவோ இருக்க இயலாது ..இவர் செய்த வினைக்கு , எதிர்வினை இருந்தே தீரும் .....


sankarkumar
மே 31, 2024 15:01

வீரமணியும் வீரப்பனுக்கு தியாகிகளை. காவலர் வேலையை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்


vijai
மே 31, 2024 21:06

வாய மூடு ரவுடிகளை தியாகி யா சித்தரிக்காதிங்க


Sivakumar GV
ஜூன் 01, 2024 19:12

வெள்ளைத்துரை மாதிரி 4 பேர் இருப்பதால் தான் இன்று உன்னால் நிம்மதியாக சாலையில் நடமாட முடிகிறது என்று தெரிந்து கொள் மூடரே....


UTHAMAN
மே 31, 2024 12:55

கொலைகாரனுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பேருவேற. தேசவிரோத சக்திகளை என்றைக்காவது என்கவுண்டர் செய்திருக்கிறார்களா. ஓட்டும் துட்டும் போயிடுமே. அதுக்கெல்லாம் NIA தான் வரனும். தண்டத்துறை.


Senthil K
மே 31, 2024 22:22

அடுத்து.. வெள்ளை துரைக்கு.. NIA ல தான்... போஸ்டிங் காம்... உஷாராக இருங்க பாஸ்..


Bala
மே 31, 2024 12:45

2013 பத்து ஆண்டிற்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இப்போது சஸ்பெண்ட் செய்வது அக்கிரமம்.


UTHAMAN
மே 31, 2024 13:59

வாய்தா மேல் வாய்தா வாங்கியது அவர் தானே.


Jayaraman Ramaswamy
மே 31, 2024 12:22

அவர் தவறே செய்திருந்தாலும், எந்த ஆண்டு நடந்ததோ அந்த ஆண்டே அவருக்கு பதவி மாற்றமோ அல்லது தகுந்த தண்டனை கொடுத்திருக்கவேண்டும். ஒருவர் பதவிக்காலம் முடியும் தருவாயில் சஸ்பெண்ட் என்பது சரியா


Arasu
மே 31, 2024 12:04

இது தவறு ..இதில் ஏதோ உள்குத்து உள்ளது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை