உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு; வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு; வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6வது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட் அனுமதியளித்தது. அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அரசு வேலை வாங்கி தருவாகக் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x1dmui68&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், வங்கி மேலாளர், தடவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் உள்ளிட்ட சாட்சிகளிடம் அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில், 6வது சாட்சியான சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். இந்த நிலையில், 6வது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட் அனுமதியளித்தது. மேலும், வரும் 12ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ravichandran B
மார் 12, 2025 17:38

தீர்ப்பு தெரிந்ததுதானே. விரைவில் நிரபராதி என்று விடுவிக்கப்படுவார் நீதியும் மக்களும் ஏமாற்றப்படுவார்.


JEEVA
மார் 07, 2025 19:33

வெட்கங்கெட்ட சர்வாதிகாரி யின் போலீஸ் துறை, ஒரு தனி நபரை தேடி கண்டு பிடிக்க வக்கில்லாத, துப்பு கெட்ட கேடு கெட்ட துறை


raju
மார் 06, 2025 09:46

அமித் சா வுக்கும் நல்ல தெரியும் இந்த வித்தை


அப்பாவி
மார் 06, 2025 06:43

ரெண்டு வருசமா விசாரிக்க முடியாதவங்க, 50 முறைக்கு மேல் பெயில் குடுக்கக் கூடாதுன்னு உள்ளே வெச்சு விசாரிச்சவங்க, இனிமே புதுசா விசாரிக்கப் போறாங்களாம். கடைசியா குற்றம் சாட்டப் பட்டவர் குற்றத்தை ஒத்துக்கலைன்னு சொல்லி ஊத்தி மூடிருவாங்க.


தாமரை மலர்கிறது
மார் 06, 2025 02:22

செந்தில் உள்ளே போகும் நேரம் நெருங்குகிறது.


Kasimani Baskaran
மார் 05, 2025 21:39

தினமும் ஒரு கோடி கொடுத்து கூட பெரிய வக்கீல் வைத்து வாதிட பணம் இருக்கிறது. பிறகு எப்படி நீதி கிடைக்கும்?


நிக்கோல்தாம்சன்
மார் 05, 2025 21:31

A1 கிழவன் ஆகும்வரை நீதிமன்றங்கள் சும்மானே இருக்கும் அல்லவே


Raghavan
மார் 05, 2025 21:28

இந்த வழக்கை இப்போதே முடிச்சு அமைச்சர் நிரபராதி என்று சொல்லிவிட்டு போங்களேன். யார் என்ன சொல்ல போகிறார்கள். பத்தோட பதினோனு அத்தோட இது ஒன்னு என்று மக்கள் நினைத்துக்கொண்டு போகப்போகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
மார் 05, 2025 21:25

சின்ன அணிலு எங்கே, தமிழக போலீஸ் ஸ்காட்லாண்ட் போலீஸை விட திறமையானவர்கள் என்று பீத்தல் வேறு, வெக்கங்கெட்ட மானங்கெட்ட திமுக அரசு, கேவலமான அரசு.


Barakat Ali
மார் 05, 2025 20:33

துக்ளக்கார் அதிக உயரம் குதித்தாட இதுதான் காரணமா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை