உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி சப்ளை அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு அம்பலம்

மது ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி சப்ளை அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு அம்பலம்

சென்னை: மது ஆலைகளில் இருந்து, 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேரடியாக மதுபானங்கள் வினியோகம் செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின், 4,830 சில்லறை கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=46xzh3w9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்கடைகளுக்கு, ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.அதன் அடிப்படையில், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மது ஆலைகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்று, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில், தி.மு.க., மேலிடத்து முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் உள்ள, எஸ்.என்.ஜெயமுருகனின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.அதேபோல, சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாக கூறப்படும் மதுபான தயாரிப்பு நிறுவனமான, 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவேர்ஸ்' அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.டாஸ்மாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மதுபானங்கள் விற்கும், தி.மு.க., முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின், 'கால்ஸ்' குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள மது ஆலைகளிலும் சோதனை நடந்தது. சென்னை, எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தி, கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:'டாஸ்மாக்' கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த, 35 வழக்குகள் மீது, நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கு தேவையான பாட்டில்களை, ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்து, 43 குடோன்களில் இருப்பு வைக்க வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் எல்லா மது பாட்டில்களுக்கும், கலால் வரி செலுத்த வேண்டும். குடோன்களுக்கு கொண்டு வரும் எல்லா பாட்டில்களும் ஆவணத்தில் வரவு வைக்கப்பட வேண்டும். சில்லரை கடைகளில் இருந்து தேவை பட்டியல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப, குடோன்களில் இருந்து வினியோகம் செய்ய வேண்டும்.கடைகளில் தினமும் எத்தனை பாட்டில்கள், எவ்வளவு ரூபாய்க்கு விற்பனையானது என்ற விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும். சோதனையில் கலால் வரி தொடர்பாக, எங்களுக்கு கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நேரடியாக சில்லறை கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பாட்டில்களின் விற்பனையும் கணக்கில் காட்டப் படவில்லை.கலால் வரி ஏய்ப்பு செய்ததுடன், கொள்முதல் மற்றும் விற்பனையில், பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பது தெரியவருகிறது. இதுபற்றி விரிவான விசாரணை நடக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

SRITHAR MADHAVAN
மார் 20, 2025 07:39

டாஸ்மாக்கின் அப்பாவா?


SRITHAR MADHAVAN
மார் 20, 2025 07:33

வணிக வரித்துறை, ஜிஎஸ்டி துறை மற்றும் காவல் துறை ஆகியவை இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிஸ்டில்லரிகளில் இருந்து அரசியல்வாதிகளுக்கு பணம் மட்டுமல்ல, ஜிஎஸ்டி, வணிக வரிகள், தொழிற்சாலைகள் ஆய்வாளர், தொழிலாளர் ஆய்வாளர், ரோந்து ஜிஎஸ்டி வாகனங்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை போன்ற அனைத்து அரசு துறைகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டாலும், அமலாக்கத்துறை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


R.P.Anand
மார் 08, 2025 13:20

திமுக கரான் நாத்துற பாருக்கும் சப்ளை நடந்திருக்கும் அதையும் ஆராய வேண்டும்.


Veluvenkatesh
மார் 08, 2025 11:37

தமிழ்-தமிழர் நலன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டும், நீலி கண்ணீர் வடித்துக்கொண்டும் இந்த திருட்டு திராவிடம் நமது மக்களுக்கு மறைமுகமாக செய்து வரும் கேடு, இத்தோடு களை எடுக்கப்படாவிட்டால், நமது வருங்கால தமிழ் சமூகம் வரலாறு இல்லாமல் அழித்து விடுவார்கள் இந்த தமிழின விரோதிகள். மது ஆலைகள் அனைத்தும் நடத்துவோர் திராவிட ஊழல் குடும்பத்தின் பினாமிகள் தான், இவர்கள் அடிக்கும், கொள்ளை ஆயிரமாயிரம் கோடிகள், இது நமது பாவப்பட்ட மக்களின் வியர்வை துளிகள்தான், இவர்கள் ஏழைகளின் ரத்தம் குடிக்கும் நவீன ரத்த காட்டேரிகள். நமக்கு தெரிந்து நமது அண்டை வீடு-நமது கிராமம் என எத்தனை குடும்பங்கள் அழிந்து வருவதை தினம் தினம் கண்ணால் பார்க்கிறோம்? டாஸ்மாக் ஊழல் என்பது நமது இளைய சமுதாயத்தை குறிவைத்து நடத்தப்படும் இன ஒழிப்பு தாக்குதல் மட்டுமே-தயவு செய்து தமிழ் மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நமது பிள்ளைகளுக்கு சமசீர் கல்வி என்று கருணாநிதி வரலாறு சொல்லிக்கொடுத்து-அவர்கள் பிள்ளைகள் பற்பல மொழிகள் படித்து வெளி நாட்டில் செட்டில் ஆகிவிடுவார்கள். கடந்த காலம் எப்படியோ? இந்த முறை நடக்கும் ED ரெய்டு சட்டவிதிகளுக்கு உட்பட்டு-ஊழல் புரிந்த அனைவரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கு மக்களின் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும். டாஸ்மாக் ஒழிப்போம் தமிழ் நாட்டை காப்போம்.


ஆரூர் ரங்
மார் 08, 2025 11:09

ஆக டாஸ்மாக்கில் பில் போடாமலேயே விற்பனை செய்வதன் ரகசியம் இதுதானா? அப்போ ஸ்டாக்குக்கும் கணக்கு இருக்காதே. கூடுதல் லாபம் அப்படியே கரூருக்கு?.


sankar
மார் 08, 2025 10:40

மதுபிரியர்களின் மந்திரி என்ன சொல்கிறார் ?


Anand
மார் 08, 2025 10:35

டாஸ்மாக் டுமீல்ஸ் இருக்கும்வரை இவனுங்களை அசைக்க முடியாது, அசைக்க முடியாது.


PR Makudeswaran
மார் 08, 2025 10:24

நேற்று யாரோ சொன்னாங்க ரெய்டுக்கு எல்லாம் தி மு க பயப்படாது.துணை முதல்வருக்கு எல்லாம் தெரியும்.


karthik
மார் 08, 2025 10:08

இது ரொம்ப தாமதம்.. ரெண்டு திராவிட கும்பல்களும் ஏற்கனவே பல லட்சம் கோடிகள் சுருட்டிவிட்டார்கள்


பல்லவி
மார் 08, 2025 09:14

ஒரே கட்டையில் வெந்தும் வேகாததுமான வியாதிகள் அரசியலில் சகஜமாக இருந்து வருகிறது


முக்கிய வீடியோ