உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜி., மாணவர் சேர்க்கை: துவங்கியது கவுன்சிலிங்

இன்ஜி., மாணவர் சேர்க்கை: துவங்கியது கவுன்சிலிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங்-ஐ இன்று(ஜூலை 22) அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில், 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, தமிழக அரசு ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங்கை நடத்துகிறது. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைன் வழியில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, 2.09 லட்சம் பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று(ஜூலை 22) துவங்கியது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர், 3,743 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், விளையாட்டு பிரிவினர், 2,112; மாற்றுத் திறனாளிகள், 408; முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், 1,223 பேர்.இன்றும், நாளையும் நடக்கும் கவுன்சிலிங்கில், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துள்ள மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 387 பேர் பங்கேற்க உள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு வரும், 25 முதல், 27ம் தேதி வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்பின், வரும், 29ம் தேதி முதல் செப்.,3 வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை