உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜி., கல்லுாரி செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு

இன்ஜி., கல்லுாரி செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு

சென்னை:அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வரும் 15ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளதாக, அறிவிக்கப்பட்டிருந்தது. லோக்சபா தேர்தல் ஓட்டுப் பெட்டிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வைக்கப்பட்டு உள்ளதால், தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, வரும் 15ம் தேதி துவங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள், ஜூன் 6ல் துவங்கும்; தேர்வு கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ