உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோ ஷூட்! தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்.,

வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோ ஷூட்! தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி-மு.க, பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை; பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க., சார்பில் உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barakat Ali
நவ 30, 2024 16:20

சென்னையை மட்டுமே கவனிப்போம் .... மற்ற ரெட் அலர்ட் மாவட்டங்களைப் புறக்கணிப்போம் .... ஏன்னா சென்னை எங்கள் கோட்டை ....


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 15:52

சிறுமுகை கா. முத்து : நீ இப்போ எதுக்கு என் காலைப் பிராண்டுகிறாய்? இ பி எஸ் திமுகவா? அதிமுக தானே? இ பி எஸ் சின் செயலை விமர்சித்தால் திமுக, ஓவர் டைம் னு என்னவோ உளறி வெச்சிருக்கியே???


N Srinivasan
நவ 30, 2024 13:59

அரசின் குறைபாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் ஒரு முக்கியமான காரணம் இந்த முறை Metro rail வேலைகள் ஒரே சமயத்தில் பல இடங்களில் நடக்கின்றன இதனால் தண்ணீர் வடியக்கூடிய நிலை இல்லாமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம்


joe
நவ 30, 2024 13:49

வடிகால் பணியாவது மண்ணாங்கட்டியாவது .சட்டத்தில் ஓட்டை எங்கே உள்ளது .அதை எப்படி பயன்படுத்தி சம்பாதிக்கலாம் .மகனும் தானும் எப்படி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கலாம் என்று வினாடிக்கு வினாடி திட்டம் போட்டு கட்சிக்கு பலரையும் பங்காளிகளாக சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் .அய்யா எடப்பாட்டியாரே நீங்களும் அப்படியா ?திராவிட காட்சிகள் எல்லாமே அப்படித்தானே .தமிழன் திராவிடனே அல்ல .எல்லாம் ஊழல்தான் .


Barakat Ali
நவ 30, 2024 13:43

வடிகால் பணிகள் உருப்படியா நடக்கலை என்பதற்கு என்ன ஆதாரம் ?? மேம்பாலங்களில் வண்டியைக் கொண்டு போய் பெரும்பாலானோர் நிறுத்தியதே ஆதாரம் .....


குமரன்
நவ 30, 2024 13:34

பெயரளவில் கட்சி நடத்தி அறிக்கை விட்டு என்ன ஆகப்போகுது குடுமிபிடி ஆட்சியாளர்களிடம் உள்ளதான்னு சின்ன டவுட்


Sekar Shunmugaraj
நவ 30, 2024 13:22

ஜெயலலிதா மரணம், 13 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு ஸ்டெர்லிட். சேகர் ரெட்டியின் 200கோடி, கொடநாடு தொடர் கொலைகள் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு விசாரிக்க


Anvar
நவ 30, 2024 14:13

இவைகளால் ஆளுக்கும் மக்களுக்கும் என்ன பயன் .. இப்படி தான் நாம் நாசமாய் போய்க்கொண்டிருக்கறோம் 4000 கோடி சிலவு எப்படிப்பட்ட மழை வந்தாலும் ... உருட்டு உருட்டுன்னு வாயிலே வடை சுட்டதால் தான் நாம் இந்த கேள்விகளை சாதாரண மனிதனாக கேட்க வேண்டியிருக்கிறது. பொது ஜனகளை பாதிக்கும் எதுக்கு கேள்வி கேட்பவர்களை அஆதரிக்க ஏதும்.. உங்க ஈட்டுக்குள் அழை வரும்போது வரும் கோவம் அப்போ நீங்க ஜெயலலிதா மரணம் பாத்தியா பேசுவீங்க


Barakat Ali
நவ 30, 2024 16:11

அன்வர் .... கூலிப்படை கூவட்டும் .... விடுங்க .....


Dharmavaan
நவ 30, 2024 13:20

EPS சொல்வது 200 % உண்மை. எல்லாம் கேட்ட பிறகு நீரை இறைப்பது கண்துடைப்பு வேலை


xyzabc
நவ 30, 2024 13:12

கணக்கு கேட்டால் கோபம் வரும்.


MADHAVAN
நவ 30, 2024 13:11

நீங்கள் ஒரு அவசரக்குடுக்கை, மழை பெய்யும்போது உடனே தண்ணி எப்படி வத்தும், 1 மணி நேரம் கூட பொறுக்காமல் இப்படி அவசரக்குடுக்கைபோல நீர் பேசுவதுதான் சிறு பிள்ளை தானம், இதனால் தான் உங்களை எல்லாம் ஜெயலலிதா காலுக்கு கீழ வச்சுயிருந்தாங்க