உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு முட்டுச்சந்தை கூட தி.மு.க.,வால் காப்பாற்ற முடியாது: அண்ணாமலை

ஒரு முட்டுச்சந்தை கூட தி.மு.க.,வால் காப்பாற்ற முடியாது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வெறும், 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது; பொய்யான தகவலை தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்க இருக்கிறார் என்ற உண்மையை, தன்னை அறியாமல் வெளிப்படுத்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.வெறும், 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என்ற உண்மை, முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்? மகனும் மருமகனும் சேர்ந்து, 30,000 கோடி ரூபாய் ஊழல், மணல் கொள்ளை, மாநிலம் முழுதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கனிம வளங்கள் கொள்ளை, கஞ்சா, போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, சிறைக்கு செல்ல காத்து கொண்டிருக்கும் தி.முக., அமைச்சர்கள், நிர்வாகிகள் என, இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் தங்கள் குடும்பத்தினர் பெயரை, 'ஸ்டிக்கர்' ஒட்டி கொள்கிறார் ஸ்டாலின்.கடந்த 2021 தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளும், மத்திய அரசிடம் நிறைவேற்ற கோரியிருப்பதும் தான், இந்த நீளமான துண்டு சீட்டில் இருக்கிறது என்பது கூட தெரியாமல், அதை அப்படியே வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.தி.மு.க.,வும், காங்கிரசும் கச்சத்தீவை தாரைவார்த்ததன் விளைவு, நம் மீனவர்கள் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்படுகின்றனர். அனைத்து மாநிலங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி கொண்டிருக்க, போலி சமூக நீதி நாடகமாடி கொண்டிருக்கிறது தி.மு.க., சொந்த தொகுதியை விட்டு தனித்தொகுதி என்பதற்காக, '2ஜி' ராஜாவை, நீலகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. மலை கிராமங்களுக்கு சாலை வசதியை கூட அமைத்து கொடுக்காமல், வெட்கமே இல்லாமல் சமூக நீதி பற்றி பேசுவதெல்லாம் தேவையா ஸ்டாலின்?கடந்த, 2021 தேர்தலின் போது, 511 வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க., அவற்றில் எத்தனை நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கூற தைரியம் இருக்கிறதா?முதல்வர் பதவிக்கு சற்றும் பொறுப்பில்லாமல், பொது மக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களை தெரிவிக்க ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.யார் எதை எழுதி கொடுத்தாலும், அதை அப்படியே படிப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அது அழகில்லை ஸ்டாலின்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
ஏப் 11, 2024 18:04

அண்ணாமலையின் ஆணவத்துக்கு தமிழக மக்கள் ஜூன் நான்காம் தேதி பாடம் புகட்டி முடிவு கட்டுவார்கள்!


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 11, 2024 13:52

டேய் வெத்து VEETU புஷ்வாணம்


Indian
ஏப் 11, 2024 12:14

தி மு கா வால் முட்டு சந்தை காப்பத்த முடியும் எங்க வோட்டு தி மு க வுக்கு தான்


katharika viyabari
ஏப் 11, 2024 12:11

இந்த மஹாபாரத போரில் திமுகவின் சகுனி பிரசாந்த் கிஷோர்


Nallavan
ஏப் 11, 2024 11:45

தோல்வி பயத்தில் உளறிக்கொண்டு இருக்கிறார், உளறி எந்த காலத்திலும் ஓட்டு வாங்க முடியாது


Senthil K
ஏப் 11, 2024 11:42

அந்த அளவிற்கு திமுக வொர்த் கிடையாது...


Karunakaran
ஏப் 11, 2024 10:54

இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தொழில் துறைகளில், கல்லூரிகளில், விளையாட்டு துறைகளில், மருத்துவ கல்லூரிகளில், மருத்துவத்தில், மற்றும் படித்தவர்களில் முதன்மையான மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது இவையெல்லாம் இப்போதும், இதற்க்கு முன்னர் ஆட்சி செய்த திராவிட கட்சிகளால் கட்டமைக்கப்பட்டது எனவே தமிழ் நாடு மிகவும் நல்ல முறையில் ஆளப்பட்டு, முன்னேற்றி இருக்கிறார்கள் ஆனால் தற்போது முன்னேற்றத்திற்கு தடையாக, தமிழ்நாடு ஒரு ரூபாய் வரிகட்டினால் பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது எனவேதான் தமிழ் நாட்டின் முதல்வர்கள் ,தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது இதற்க்கு யார் காரணம் என்று வாசகர்களே புரிந்துகொள்ளுங்கள் நன்றி


ramesh
ஏப் 11, 2024 10:40

அருணாச்சல பிரதேசத்தை சீனா காரனுக்கு முப்பது கிராமங்களுக்கு பெயர் வைக்கும் அளவுக்கு தாரை வார்த்து விட்டீர்களே, ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை சீனாவுக்கு கொடுத்து விட்டு இருநூற்று என்பது ஏக்கர் அளவுள்ள அன்பளிப்பாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திருப்பி கேட்பது சரியா


ramesh
ஏப் 11, 2024 10:33

வாய்க்கு வந்தபடி பேசி வருவதால் தான் எடப்பாடியின் கூட்டணியை இழந்து பிஜேபியை படுகுழியில் தள்ளியது


ramesh
ஏப் 11, 2024 10:31

படு தோல்வி தான் கிடைக்குமே ஒழிய வெற்றிபெற வாய்ப்பு இல்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ