உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அம்மன்-17 : கண் நோய் தீர...

தினமும் அம்மன்-17 : கண் நோய் தீர...

கண் நோய்களைத் தீர்க்கும் கண்ணாத்தாள் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சுயம்பு வடிவில் இருக்கிறாள். நாட்டரசன் கோட்டைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வியாபாரிகள் பால், தயிர் கொண்டு வருவர். குறிப்பிட்ட இடத்தில் வரும் போது கால் இடறி பால் கொட்டுவது வழக்கமாக இருந்தது. இதனை மன்னரிடம் முறையிட்டனர். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய அம்மன், அந்த இடத்தில் சுயம்பு வடிவில் தான் இருப்பதாக தெரிவித்தாள். அங்கு அரண்மனை பணியாளர்களில் ஒருவர் குளிக்காமல் பணியில் ஈடுபட்டார். அம்மனின் கோபத்தால் அவரின் பார்வை பறிபோனது. அம்மனிடம் சரணடைய அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. இதன் காரணமாக 'கண்ணாத்தாள்' எனப் பெயரிட்டனர். கண்நோய் தீரவும், கல்வியில் முன்னேறவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் பெறவும் மாவிளக்கு ஏற்றுகின்றனர். எப்படி செல்வதுசிவகங்கையில் இருந்து பிள்ளைவயல் வழியாக 9 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 1:00 மணி மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு04575 - 234 220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ