உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி

மதுரை: '18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும்' என தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.மதுரையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் பணி குறித்து மதுரையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. தேர்தல் பணியை சிறப்பாக செய்கின்றனர். தேர்தல் கமிஷன் வாக்காளர் நலனுக்காக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி அளிக்கும் போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சா பட்நாயக், மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
பிப் 26, 2025 21:34

மாநில அளவிலான திருடர்களை அகற்ற நினைத்து தேசிய அளவிலான பெரிய திருடர்களை தமிழர்கள் என்றுமே கொண்டு வர மாட்டார்கள்!


Subbu
பிப் 26, 2025 17:14

லஞ்சம் கொடுப்பவர்களை பிடிக்கலாம்


Ramesh Sargam
பிப் 26, 2025 12:45

எல்லோரும் வோட்டு போடணும். அதுவும் நேர்மையான வேட்பாளருக்கு, நேர்மையான அரசியல் கட்சிக்கு வோட்டு போடணும். தயவுசெய்து இலவசங்களை வாங்கிக்கொண்டு, பொய் வாக்குறுதி அளிக்கும் திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு வோட்டு போடாதீர்கள். அதற்கு பேசாம நோட்டாவுக்கு வோட்டு போடுங்க.


பிரேம்ஜி
பிப் 26, 2025 12:27

நம் குல வழக்கப்படி திருடர்களுக்கே திரும்ப திரும்ப தவறாமல் ஓட்டுப் போட்டு அவர்கள் பரம்பரை பரம்பரையாக முன்னேற வழிவகை செய்ய வேண்டும்!


Jayaraman
பிப் 26, 2025 12:26

தேர்தல் நாளன்று மட்டும் , அனைத்து அரசு பேருந்துகளிலும் பயண சீட்டு இலவசம் என்று கொண்டு வரலாம்.


ஜயா
பிப் 26, 2025 11:16

ஒட்டு வீதத்தை அதிகரிக்க நிதியிலிருந்து ஏதாச்சும் குடுத்தாங்களா?


புதிய வீடியோ