வாசகர்கள் கருத்துகள் ( 5 )
AKATHIN AZHAKU MUKATHIL THERIYUM?
பொள்ளாச்சியை, புள்ளதாச்சின்னு படிக்கிற உனக்குத்தான் பயம்??
like
like this review
உளறுவதற்கு அளவே இல்லையா?
திருச்சி : பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என திருச்சியில் நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். திருச்சி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க., போட்டியிடுகிறது. கட்சியின் வேட்பாளராக துரைவைகோ போட்டியிடுகிறார். பெரம்பலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளராக அமைச்சர் நேருவின் மகனான அருண் நேரு போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கிய முதல்வர் ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். வரும் ஏப்.,17 ம் தேதி வரையில் 40 தொகுதிகளிலும் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, உதயநிதி,சிவசங்கர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, ரகுபதி உள்ளிட் அமைச்சர்கள் மற்றும் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பிரசார பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திருச்சி என்றாலே திருப்புமுனை தான். திருச்சி பாதை எப்போதும் வெற்றி பாதை. திருச்சி தான் எல்லாவற்றிருக்கும் முத்னமையாக உள்ளது.திருச்சியில் துவங்கி உள்ள பிரசார கூட்டம் இந்தியாவில் திருப்பு முனையை ஏற்படுத்தும்.
பிரதமர் முகத்தில் தோல்வி பயம்
தோல்வியின் பயத்தால் தூக்கத்தை தொலைத்தவர் பிரதமர் மோடி, பிரதமர் முகத்தில் தோல்வியின் பயம் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களை பார்த்து திட்டங்களை தீட்டி உள்ளது திமுக அரசு. தோல்விகளை மறைக்கவே தேவையில்லாத விவரங்களை பேசி திசை திருப்புகிறார் பிரதமர். தேர்தல் என்பதால் பிரதமர் இந்தியாவில் இருக்கிறார். இல்லையென்றால் வெளிநாட்டில் இருப்பார். இந்தியாவுக்கு திருப்பு முனை ஏற்படுத்த நாம் திரண்டு உள்ளோம். இண்டியா கூட்டணி ஆட்சி வந்தால் பா.ஜ.,வின் ஊழல் அம்பலாகும். * தன் பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு செய்த ஒரே ஒரு சிறப்பு திட்டத்தையாவது பிரதமர் சொல்ல முடியுமா?* தேர்தலுக்காக அவர் நடத்தும் கபட நாடகத்தை தமிழக மக்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.* பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல் ஒன்றா, ரெண்டா!அவற்றில் தேர்தல் பத்திர ஊழல் இமாலய எடுத்துக்காட்டு!கவர்னர் மூலம் மிரட்டல்
தமிழக அரசை கவர்னர் மூலம் மிரட்டி பார்க்கிறது பா.ஜ.,. அரசு .உரிமைகளுக்காக ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் செல்ல உள்ளது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் ஒப்பதல் தருவதில்லை. தமிழ்நாட்டிற்கு விரோதம் செய்து விட்டு தமிழ் தான் மூத்த மொழி என நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பிரதமர். பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம் என்கிறார் மத்திய அமைச்சர். தமிழர்கள் என்ன பயங்கரவாதிகளா.நாற்பதுக்கு நாற்பது நிச்சயம் வெல்வோம். நிவாரணத்தொகை கேட்டால் பிச்சை கேட்கிறீர்கள் என்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிவாரணம் கேட்பது பிச்சை கேட்பது அல்ல. மக்கள் பாதிக்கப்படும் போது நிவாரணம் கொடுப்பது அரசின் கடமை. பழனிசாமியின் கள்ளக்கூட்டணிபா.ஜ.,வின் துரோகங்களுக்கு துணை நின்றவர் பழனிசாமி. பழனிசாமியின் ஆட்சி அவலங்களை நீண்ட பட்டியலாக போடலாம். கூட்டணி முறிந்ததாக நாடகம் நடத்துகிறார் பழனிசாமி. பழனிசாமியின் கள்ளக்கூட்டணி விரைவில் அம்பலமாகும்.
ரூ.7 லட்சம் கோடி ஊழல் செய்த பா.ஜ.,!
பாரத்மாலா ஊழல், துவாரகா விரைவுச் சாலை ஊழல்,சுங்கச்சாவடி, ஆயுஷ்மான், ஓய்வூதியத் திட்டம், ஹெச்ஏஎல் என, பா.ஜ., 7 லட்சம் கோடிக்கும் அதிகமான ஊழல் செய்துள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ரபேல் உட்பட பல ஊழல்களை வெளிக் கொண்டு வருவோம் .பெஸ்ட் ஆப் லக் சொன்னார் கவர்னர்
பொன்முடியின் அமைச்சர் பதவிப் பிராமணம் நிகழ்ச்சியை முடித்த பிறகு, கவர்னருக்கு மரியாதைக்காக ஒரு பூங்கொத்து கொடுத்தேன். பிறகு, 'இன்று தான் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன். இப்போது ராஜ்பவனில் இருந்து துவக்குகிறேன்' என்று அவரிடம் சொல்லி விட்டு தான் வந்திருக்கிறேன். அதற்கு அவர் பெஸ்ட் ஆப் லக் என்று சொன்னார் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
AKATHIN AZHAKU MUKATHIL THERIYUM?
பொள்ளாச்சியை, புள்ளதாச்சின்னு படிக்கிற உனக்குத்தான் பயம்??
like
like this review
உளறுவதற்கு அளவே இல்லையா?