மேலும் செய்திகள்
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
6 hour(s) ago | 5
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
7 hour(s) ago
சென்னை:செயற்பொறியாளருக்கு தலைமை பொறியாளர் பதவியை மீன்வளத் துறை வழங்கி உள்ளதால், பொறியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு துறைகளுக்கான கட்டுமானப் பணிகளை செய்ய, பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை பொறியாளர்கள் அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். அரசு உதவி பொறியாளர்களாக பணியில் சேருபவர்களுக்கு உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், இணை தலைமை பொறியாளர், தலைமை பொறியாளர், சிறப்பு தலைமை பொறியாளர், முதன்மை தலைமை பொறியாளர் என, படிப்படியாக பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறையில் பதவி உயர்வு முறையாக வழங்கப்படவில்லை. இதனால், தற்போது பல செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் பதவிகள் காலியாக உள்ளன. ஒரே மாதத்தில் பலர் பணி ஓய்வு பெறுவதால், காலி பணியிடங்களை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், புதிய பதவி உயர்வு பட்டியல் தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை. இந்நிலையில், மீன்வளத் துறையில், மீன்பிடி துறைமுக கட்டுமானப் பிரிவில் அயல்பணி அடிப்படையில் தலைமை பொறியாளராக இருந்த ராஜு, மார்ச் 31ம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை பொறியாளரை நியமிக்க, பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறையிடம் பரிந்துரை கேட்கப்பட்டது. ஆனால், நடத்தை விதிகள் அமல் காரணமாக, புதிய பட்டியல் தயாராகவில்லை என மீன்வளத் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, தகுதி யான நபர் கிடைக்காததால், தலைமை பொறியாளரின் நேர்முக உதவியாளராக இருந்த செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டம் என்பவர், பொறுப்பு தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மீன்வளத் துறை செயலர் ஜடாக் சிரு தன் உத்தரவில் தெரிவித்துஉள்ளார். செயற்பொறியாளருக்கு தலைமை பொறியாளர் பொறுப்பு வழங்கியுள்ளது, பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
6 hour(s) ago | 5
7 hour(s) ago
7 hour(s) ago