உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறான தேர்வு செயல்முறை; மனித உரிமைகள் ஆணைய தலைவர் நியமனம் குறித்து காங்கிரஸ் புகார்!

தவறான தேர்வு செயல்முறை; மனித உரிமைகள் ஆணைய தலைவர் நியமனம் குறித்து காங்கிரஸ் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராம நீதிபதி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா, கடந்த ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, பார்லிமென்ட் வளாகத்தில் கடந்த டிச.,18ம் தேதி கூடி விவாதித்தது.தேர்வுக்குழுவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக ராம சுப்பிரமணியனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று நியமித்தார். கமிஷனின் உறுப் பினர்களாக பிரியங்க் கனுாங்கோ, முன்னாள் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்வு செயல்முறை தவறு என அவர்கள் குறை கூறி உள்ளனர். ஆலோசனையின் போது பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து புறக்கணிக்கப்பட்டது என்றும் கார்கே, ராகுல் குற்றம் சாட்டி உள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் மேத்யூ ஜோசப் ஆகியோரின் பெயரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் முன்மொழிந்தனர். மனித உரிமை கமிஷன் உறுப்பினர்களாக, நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அகில் அப்துல்ஹமித் குரேஷி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தனர். ஆனால் தங்கள் கருத்து புறக்கணிக்கப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sankaranarayanan
டிச 24, 2024 20:42

எதிர்க்கட்சி என்றால் எப்போதுமே அரசாங்கத்திற்கு எதிராகாவே இருக்க வேண்டும் என்ற நியதி கிடையாது மக்களின் வாழ்க்கையை பொறுத்து நாட்டின் நலம் கருதி எதிர் கட்சிகள் அரசுடன் ஒத்துழைத்தால் நல்லது இல்லையேல் அவர்கள் முற்றிலும் புறக்கணிக்காப்படுவார்கள் அவர்களது நாமதேயமே இல்லாமல் போயிடும்


M Ramachandran
டிச 24, 2024 19:59

நொல்லை கண்ணன் கண்ணுக்கு எல்லாமே தவறாக தெரியும். மக்கள் எதிரியாக மாறியுள்ள காங்கரஸ் கட்சி அலைவாய் நோக்கி என்று கொண்டிருக்கு. எந்த ஒரு சட்டாத்தையாவது மக்கள் நலம் கருதி ஆதரித்த உண்டா? காங்கரஸ் மேல் வெறுப்பு தான் வளர்கிறது


Rasheel
டிச 24, 2024 18:42

நேரு பார்முலா நிராகரிக்கப்பட்டது நாட்டிற்கு நல்லதுதான்.


thamilan
டிச 25, 2024 18:52

பிடிபட்டது அமைதி மார்க்கம் என்பதாலா...


thamilan
டிச 25, 2024 18:54

சட்டத்தை மாற்றி எழுத வேண்டும். போதை பொருள் கடத்துபவனை தூக்கிலிட வேண்டும்


nv
டிச 24, 2024 17:40

EVM ஐ கூட நம்பாத காங்கிரஸ் இப்படிபட்ட தேர்வுகளை நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை


என்றும் இந்தியன்
டிச 24, 2024 17:19

தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம். இதற்கு எதிர்ப்பு ராகுல் கார்கே. இதே பப்பு மாதிரி நான் பதில் சொன்னால் "ராகுல் கார்கே தெரிவிக்கும் இந்த எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் பழிப்பது அவமதிப்பதிப்பது போல் உள்ளது ஆகவே இது மோசமானது உடனே இந்த ராகுல் பதவி விலகவேண்டும்" . என்ன ராகுல் கார்கே சரிதானே


Suppan
டிச 24, 2024 16:23

இந்த மாதிரியான தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையானால் யார் அதிக ஆதரவு பெறுகிறாரோ அவர்தான் நியமிக்கப்படுவார் என்பது நியதி.


Visu
டிச 24, 2024 16:13

ஓட்டுப்பிச்சைக்காக நாட்டையும் விற்க தயங்காத கூட்டம்தான் இப்போதிருக்கும் காங்கிரஸ் தேசப்பற்று இந்திராவோடு போய்விட்டது


Anantharaman Srinivasan
டிச 24, 2024 15:31

திரு.ராமசுப்ரமணியம் அப்பழுக்கில்லாத நீதிபதியாக பணியாற்றியவர். மனிதஉரிமை கமிஷனுக்கு பொருத்தமானவர். கேடு கெட்ட காங்.க்கு குற்றம் காண்பதே தொழிலா போச்சு.


Kumar Kumzi
டிச 24, 2024 15:16

இத்தாலி ரெத்தத்துக்கு பிறந்த பப்பூ எப்போதுமே நாட்டின் தேசத்துரோகிகளுக்கு தான் ஆதரவளிப்பான்


Ganapathy
டிச 24, 2024 15:04

அதானே அவரு பெயரு "மொஹம்மது மைக்கேல் ராமசுப்பிரமணியன் அய்யர் கான்" அப்டீன்னு ஏன் இல்ல? இதை நாங்க ஒத்துகினா எங்க "நடுநிலையா நக்கித்துன்னுற" பொழப்பு என்னாவறது?


முக்கிய வீடியோ