உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஐ.ஜி.,க்கே பாதுகாப்பு இல்லை மாஜி அமைச்சர் முல்லைவேந்தன் பேச்சு

தமிழகத்தில் ஐ.ஜி.,க்கே பாதுகாப்பு இல்லை மாஜி அமைச்சர் முல்லைவேந்தன் பேச்சு

அரூர்:''தி.மு.க., ஆட்சியில் ஜ.ஜி.,க்கே பாதுகாப்பு இல்லை,'' என, அரூரில் நடந்த அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டத்தில், மாஜி அமைச்சர் முல்லைவேந்தன் பேசினார்.தர்மபுரி மாவட்ட, ஜெ., பேரவை சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்டில், திண்ணை பிரசார கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., மாவட்டச்செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அமைப்புச்செயலரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன் பேசியதாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பாருங்கள்; அதேநேரம், ஸ்டாலின் ஆட்சியில் நடந்த வேதனையை பாருங்கள். ஸ்டாலின், 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில், 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று பேசுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி கொண்டு வந்த குமரன் தடுப்பணை சீரமைப்பு, கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டு விட்டுத்தான், தி.மு.க., பெருமை பேசுகிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தலும் தினமும் கொலை, கொள்ளை, பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. தாய்மார்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் போலீஸ் ஜ.ஜி.,க்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அவருடைய அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து, உயிருக்கு பாதுகாப்பு இல்லாது நிலை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். மொத்தத்தில், தமிழகம் சுடுகாடு ஆக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை