உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரக்கு ரயில் தடம் புரண்டு 3 மணி நேரம் சேவை பாதிப்பு

சரக்கு ரயில் தடம் புரண்டு 3 மணி நேரம் சேவை பாதிப்பு

திருப்பத்துார் : சென்னையிலிருந்து பெங்களூருக்கு, 21 பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்றது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டியில் நேற்று மாலை, 5:30 மணியளவில் சென்றபோது, 16வது பெட்டி தடம் புரண்டது. இதையடுத்து, இரு புறமும் அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் வளத்துார் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன. ரயில் தடம் புரண்டதை சீர்செய்யும் பணியில், 3 மணி நேரத்திற்கும் மேலாக ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், ரயில் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்