உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்.எஸ்.ஐ., கட்டண சலுகை; ஏழை மக்களுக்கு எட்டாக்கனி

எப்.எஸ்.ஐ., கட்டண சலுகை; ஏழை மக்களுக்கு எட்டாக்கனி

சென்னை : குறைந்த பரப்பளவு வீடுகளுக்கு கட்டட தளபரப்பு குறியீடான, எப்.எஸ்.ஐ., கட்டணத்தில், அரசு அறிவித்த சலுகையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மனையின் பரப்பளவில், இரண்டு மடங்கு அளவுக்கு கட்டடங்கள் கட்டலாம். அதன்படி, 1,000 சதுர அடி நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளாக, 2,000 சதுர அடி அளவுக்கு கட்டடம் கட்டலாம். சாலை அகலம், மனையின் முகப்பு அகலம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அடிப்படையில், தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இரண்டு மடங்குக்கு மேல், கூடுதல் தளபரப்புக்கு கட்ட வேண்டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும். இதில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு சில சலுகைகள், 2022ல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 400 சதுர அடி வரையான கட்டடங்களுக்கு, 100 சதவீதம் கட்டண சலுகை, 500 சதுர அடி வரை, 75 சதவீதம், 600 சதுர அடி வரை, 50 சதவீதம், 900 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, 25 சதவீதம் என்ற அடிப்படையில், கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் பயன் யாருக்கும் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, கட்டுமான துறை பொறியாளர்கள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டப்படும் குறைந்த பரப்பளவு கட்டடங்களுக்கு தான், இந்த சலுகை வழங்கப்பட்டது. அரசு ஏழை மக்களுக்காக நல்ல நோக்கத்தில், இதுபோன்ற சலுகைகளை வழங்கினாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர்களும், தலைவர்களும், அதிகாரிகளும், 20,000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் கேட்கின்றனர். இவர்கள் கேட்கும் தொகையுடன் ஒப்பிட்டால், கூடுதல் எப்.எஸ்.ஐ., வசதியை உரிய கட்டணம் செலுத்தியே பெறலாம்.குறைந்த பரப்பளவு கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., கட்டண சலுகையை முறையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி