சிங்கபெருமாள் கோவிலில் ஜி ஸ்கொயர் குடும்ப விழா
சென்னை:சிங்கபெருமாள் கோவிலில், 'ஜி ஸ்கொயர்' வீட்டுமனை வளாகத்தில் நடந்த குடும்ப விழாவில், 500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'ஜி ஸ்கொயர்' செங்கல்பட்டு மாவட்டம், சிங்க பெருமாள் கோவிலில் மூன்றாம் கட்ட வீட்டு மனை விற்பனை திட்டத்தை அறிவித்தது.முதல் மற்றும் இரண்டாம் கட்ட திட்டங்களை போல, இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டுமனைகள் வாங்க, 400 பேர் பதிவு செய்துள்ளனர்; 137 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சமூக உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன், குடும்ப விழாவுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதில், 500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் தந்தன.சிங்கபெருமாள் கோவில், ஜி ஸ்கொயர் திட்டம் 3ல், வீட்டுமனை ஒரு சதுர அடி 2,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சிங்கபெருமாள் கோவில் மேம்பால பணிகள் முழுமை பெற்றதும், ஒரு சதுர அடி விலை 3,500 ரூபாயாக உயரும் என்று, கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், வில்லா வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஜி ஸ்கொயர் அறிமுகப்படுத்துகிறது.ஒரகடம் பைபாஸ் சாலையில், 34.53 ஏக்கரில் உள்ள ஜி ஸ்கொயர் வளாகத்தில், 624 குடியிருப்புகள், 50க்கும் அதிகமான உலகத்தர வசதிகளுடன் உள்ளன.இதுதொடர்பாக, ஜி ஸ்கொயர் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறும்போது, ''சென்னைக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், சிங்கபெருமாள் கோவிலில் வீடுகள் வாங்க, மக்களிடத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.