உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உச்சத்தில் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது!

உச்சத்தில் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. நேற்று முன் தினம் மே 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று (மே 20) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை எவ்வளவு?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R S BALA
மே 20, 2024 19:58

மக்கள் அதிர்ச்சிஎன்ன அதிர்ச்சி வேண்டி கெடக்கு அதுதான் தினசரி எகிறுதே விலை தங்கம் வாங்கணும்ங்குற நினைப்பெல்லாம் போயி பல ஆண்டுகள் ஆச்சுங்க


அப்புசாமி
மே 20, 2024 11:23

தங்கம் வாங்குனா அதுக்கு மூணு சதவீதம் ஜி.எஸ்.டி. ஒரு ஆயுள் காப்புடி, மருத்துவக் காப்பீடோ எடுத்தா அதுக்கு 18 சதவீதம் அழணும். மக்கள் எதை வாங்குவாங்க? நம்மாளுங்க ஜி.எஸ்.டி மூளையே மூளை. ஆயுள் காப்புடு வாணாம். தங்கம் வாங்குங்கோ. பின்னாடி உடம்பு சரியில்லாமப் போனா தங்கத்தை அதிக விலைக்கு வித்து வைத்தியம் பாத்துக்கலாம். மீதிப்பணத்தில் ஊடு கூட கட்டலாம். அனாவசியமா ஜி.எஸ்.டி கட்டி அழவேண்டாம்.


Sampath Kumar
மே 20, 2024 11:09

இந்த தங்கத்தை தலையில் வைத்து தூக்கி கொண்டாடும் மக்கள் உள்ளவரை இது குறையாது இதை விட இரும்பு எத்தனையோ பயன் உள்ளது அதுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்க மாட்டனுக நல்லது காலம் இல்லை


மேலும் செய்திகள்











புதிய வீடியோ