உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் தறிக்கெட்டு ஓடிய அரசு பஸ்: வீட்டுசுவர் சேதம்

ராமேஸ்வரத்தில் தறிக்கெட்டு ஓடிய அரசு பஸ்: வீட்டுசுவர் சேதம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் டிப்போ முன்பு நிறுத்தியிருந்த அரசு பஸ் பள்ளத்தில் சறுக்கி தறிக்கெட்டு ஓடி வீட்டு சுவர் மீது மோதி நின்றது.ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துகழக பணிமனை முன் நேற்று காலை 10:00மணிக்கு டிரைவர் நாகராஜ், கண்டக்டர் முருகேசன் பஸ்சை நிறுத்தி விட்டு டிப்போவுக்குள் சென்றனர். பஸ்சை மேடான இடத்தில் நிறுத்தி இருந்ததால், பள்ளத்தில் சறுக்கி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து 200 அடி துாரம் தறிக்கெட்டி ஓடி சத்யா என்பவரது வீட்டுச் சுவரின் மீது மோதி நின்றது.இந்த பஸ் தேசிய நெடுஞ்சாலை கடந்து சென்ற போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் டிரைவர் இன்றி பஸ் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் பின் மண் அள்ளும் இயந்திர உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி