உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரான்ஸ்பார்மர் கொள்முதல் அரசு பதிலளிக்க உத்தரவு

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:மின்வாரியத்துக்கு, 'டிரான்ஸ்பார்மர்' கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 - 23ம் ஆண்டில், தமிழக மின் வாரியத்துக்கு, 45,800 டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ய, 1,182 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டு, பணி வழங்கப்பட்டது. இதில், 397 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் கோரி, லஞ்ச ஒழிப்புத் துறையில், அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரிய தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, மின்வாரியம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ