மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
28 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
44 minutes ago | 4
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
57 minutes ago
சென்னை : 'குரூப் - 2' தேர்வில், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில், குரூப் - 2ஏ பதவியில் காலியாக உள்ள, 5,990 பணியிடங்களை நிரப்ப, 2022ல் முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதன்மை தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களில் முன்னிலை மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு கடந்த மாதம் பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளில், 5,990 இடங்களுக்கு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்த பட்டியலில், 40,000 பேர் இடம் பெற்றுள்ளனர். தேதி விபரங்களை, www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
28 minutes ago
44 minutes ago | 4
57 minutes ago