உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களுக்கு ஜி.எஸ்.டி., விதிப்பு: வருமானம் அடிப்படையில் வசூல்

கோவில்களுக்கு ஜி.எஸ்.டி., விதிப்பு: வருமானம் அடிப்படையில் வசூல்

மதுரை: ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, வருவாய் வரக்கூடிய கோவில்களுக்கும், ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.இதுவரை செலுத்தாத கட்டணத்தையும், அபராதத்தையும் சேர்த்து, பல கோடி ரூபாய் வரி செலுத்த, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை தெரிவித்து உள்ளது. அறநிலையத் துறையின்கீழ் அதிக வருவாய் வரும் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., 2017ல் அறிமுகமானது. அப்போது, கோவில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும், மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் விலக்கு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜி.எஸ்.டி., வசூலிப்பில் சில மாற்றம் செய்யப்பட்டது.குறிப்பாக குத்தகைதாரரிடமிருந்து பெறப்பட்ட வாடகை வருமானத்தில் உரிமையாளர், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில், கோவில்களும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில்களில் பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்கும் விடுதி போன்றவை வருமானம் வரக்கூடியவை.இதை சேவையாக செய்து வருவதாக கோவில் நிர்வாகம் கூறினாலும், அது சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது ஒரே மாதிரியான கட்டணம், விலை என்பதால், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தவிர, சில முக்கிய கோவில்களுக்கு, பல கோடி மதிப்புள்ள நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. பல ஏக்கர்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.இவற்றால் கோவில் நிர்வாகங்கள் வருவாய் ஈட்டுவதால், அதற்கும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட 2017 முதல், இதுவரை எந்த வரியும் செலுத்தாததால், எட்டு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி, அதற்கான அபராதம் என, ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வரி நிர்ணயித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அறநிலையத்துறை, 'பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் செயல்படக்கூடியது கோவில். வணிகநோக்கத்துடன் செயல்படவில்லை' என, ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் விளக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

PR Makudeswaran
மார் 10, 2025 10:13

இதே அளவுகோல் மசூதிக்கு சர்ச்சுக்கு ஆகியவைகளுக்கும் உண்டா?


K.aravindhan aravindhan
மார் 10, 2025 08:14

Gst கௌன்சிலில் தமிழக அரசு கலந்துகொண்டு கருத்துக்களை Gst கௌன்சிலில் தெரிவிக்கவில்லையா.


venugopal s
மார் 09, 2025 16:40

இது தான் பா ஜ க வின் உண்மை முகம்!


manjagrup
மார் 15, 2025 12:36

கோவிலை விற்பனை தளமாக மாற்றி வைத்திருக்கிறது அறநிலையத்துறை பக்தர்களுக்கு பிரசாதம் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது அல்லது கொடுப்பதில்லை விற்பனைக்கு தான் இருக்கிறது எல்லாவற்றையும் வாடகைக்கு விட்டு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதால் தான் இந்த பிரச்சனை கோவில்களில் அனைத்தும் இலவசமாக இருக்க வேண்டும் ஜி எஸ் டி ஒரு பிரச்சனையும் இல்லை.


கோபாலன்
மார் 09, 2025 16:23

கோவில் வர்த்தக நிறுவனமா அல்லது தொழுகை ஸ்தலமா


R K Raman
மார் 10, 2025 14:52

அறமில்லாத்துறை கட்டாய வசூல் செய்து தரிசனங்களுக்கு பணம் பிடுங்குவது தொழில் நுட்பம் இல்லை?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2025 14:39

திராவிட மாடலுக்கு கொடுக்கும் முட்டு அபத்தமாக உள்ளது .... அவரது கருத்துக்களைப் படித்தால் குறைந்த பட்ச அறிவு பெற்றவராகக்கூட அவரைக் கருத முடியவில்லை ....


Selliah Ravichandran
மார் 09, 2025 12:23

No church,no mosque.only temple.Jai Hind tamilnadu.Jai Jai Gopalapuram hospital (guest house )


ஆரூர் ரங்
மார் 09, 2025 11:47

ஆலய தணிக்கைக் கட்டணம் என்ற பெயரில் ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை( சட்ட விரோதமாக) மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தணிக்கை அறிக்கை அளிப்பதில்லை. ஏனெனில் தணிக்கையே நடத்தாமல் கட்டணம் எடுத்துக் கொள்கிறது. அந்த நிதியில் அமைச்சர் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் ஐந்து நட்சத்திர உணவு போன்றவற்றுக்கு செலவழிக்கப் படுகிறது. தணிக்கைக் கட்டணத்துக்கு TDS கூட பிடிப்பதில்லை. இதற்கு வரி விதித்தால் என்ன தவறு?


எவர்கிங்
மார் 09, 2025 11:04

கிறித்தவ தேவாலய தசம பாகத்திற்கும் வரி விதிக்கும் வீரமிருக்கா அரசுக்கு?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2025 10:53

கோவிலுக்கு சொந்தமில்லாத இடத்தில் சடங்குகள் புரோகிதர்களை தடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு .... இந்தச் செய்தியும் தொடர்புடையது ..... தனிநபர்கள் செய்யும் புரோகிதத் தொழிலையே முடக்கும் திட்டம் இருக்கலாம் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2025 10:50

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் செயல்படக்கூடியது கோவில். வணிகநோக்கத்துடன் செயல்படவில்லை ...... இதுவே பித்தலாட்டம் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை