உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூடுவரா: எச்.ராஜா கேள்வி

முதல்வர் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூடுவரா: எச்.ராஜா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மடத்துத்தெருவில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரத்தில், விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:'ஹிந்து தர்மம், சனாதனத்தை மலேரியா, டெங்கு பரப்பும் கொசுவை போல அழிப்போம்' என பேசினர். ஆனால், 'சனாதன தர்மம் என்றால், அது ஹிந்து மதம் தான்' என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் என்ன சொல்வர்'பழநியில் முருகன் பெயரில் நடத்திய மாநாடு, ஆன்மிக மாநாடு அல்ல' என, அமைச்சர் உதயநிதி பேசினார். அந்த மாநாடு, ஹிந்து விரோத மாநாடு. முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்கின்றனர். அதை உண்மையான ஹிந்துக்கள் ஏற்க மாட்டர்.சனாதன ஹிந்து மதத்திற்கு எதிரி அமைச்சர் உதயநிதி. அவர் மீது எல்லா மாநிலங்களிலும் வழக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் ஹிந்து விரோத உதயநிதியின் அடிமைகள்.தமிழகத்தில் மொழி கொள்கை தொடர்பாக, படிக்கிற மாணவர்களும்; பெற்றோரும் தான் முடிவெடுக்க வேண்டும். மொழிகளைப் பற்றி அமைச்சர் பொன்முடி பேசக்கூடாது. தமிழகத்தின் 294 பொறியியல் கல்லுாரிகளில் 980 ஆசிரியர்கள், ஆதார் அட்டையைப் போலியாக வடிவமைத்து, பணி பெற்றுள்ளனர்.தன் துறையை கவனிக்க முடியாத திறமையற்ற, திராணியற்ற அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் ஊழல் பேர்வழிகள். சென்னை வேளச்சேரியில், ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூட முடியுமாமுன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே கருணாநிதியை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் வாசலிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த போராட்டம் நடத்துவோம்.முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்க வேண்டும். பேசுவதற்கு நீங்கள் யார் ஒரு மொழியை படிக்கக் கூடாது என தடுப்பது கூட, ஒரு திணிப்புதான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Senthil
செப் 07, 2024 17:07

அதைச் சொல்வதற்கு பிஹாரிலிருந்து வந்த நீங்கள் வேண்டியதில்லை. வந்தோமா பிழைப்பு நடத்தினோமா என்று மட்டும் இருங்கள். எங்கள் வீட்டை எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


Mani . V
செப் 04, 2024 06:22

அவர் என்ன அந்தப் பள்ளியின் செக்கூரிட்டியா - இழுத்து மூட?


Arachi
செப் 03, 2024 20:18

ஒரு மொழியை படிக்க கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. திணிக்க கூடாது என்பதுதான் பிரச்சினை. சென்னையில் இந்தி பிரச்சார சபை இருக்கிறது.எத்தனையோ மாணவர்கள் படிக்கின்றனர். போலிஸையும் கோர்ட்டையும் தரக்குறைவாக பேசியவர்தானே இவர். இவரிடமிருந்து நாகரீகத்தையா எதிர் பார்க்க முடியும்.


Rajagopalan R
செப் 03, 2024 16:47

அமெரிகேன்ஸ் நாடியாவெளிநாடு ஆனால் அங்கு ஒரு வேற்று மோஷிங படிக்கணும் கட்டாயமா . பேரன் சீனா மொழியும் மற்றவன் ஸ்பானிஷும் கூடுதலா படிக்கிறார்கள்


konanki
செப் 03, 2024 14:12

அட போங்கப்பா தேர்தலிலின் போது குவார்ட்டர் காக்கா பிரியாணி ரூபாய் 200 வாங்கி திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் கடத்தல் திராவிஷ கட்சி க்கு ஓட்டு போடும் கல் தோன்றா மண் தோன்றா மூத்த குடி களக்கு மொழி கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது


Svs Yaadum oore
செப் 03, 2024 13:40

இங்கே ஒரு மொழிகூடத்தான் படிக்கட்டும் ..எவனும் வேண்டாம்னு சொல்லவில்லை ....காசு கொடுத்தால் மூன்று மொழி ..காசு இல்லையென்றால் ரெண்டு மொழி ....இதுதான் சமூக நீதியா?? ...இதுதான் கேள்வி ??....எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் ....விடியல் திராவிடனுங்க சம்பாதிக்க CBSE பள்ளி நடத்தி காசு வாங்கி பல மொழிகள் கற்று கொடுத்து சம்பாதிப்பது ....


Svs Yaadum oore
செப் 03, 2024 13:31

காசு கொடுத்தால் இங்குள்ளவன் எவனுக்கு வேண்டுமானாலும் வோட்டு போடுவான் ....இதுக்கு இங்கே கொள்கை அடிப்படையில் பெரிய பிரளயம் வெடிக்குமாம் ...


Senthil
செப் 07, 2024 17:11

தவறான புரிதல். கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் டாஜகவுக்கு இங்குள்ளவன் ஓட்டுப் போட மாட்டான். திமுக, அதிமுகவுக்கு மட்டும்தான் ஓட்டுப் டோடுவான். காரணம் இவ்விரண்டும் நம்மவர்கள் நடத்தும் கட்சி, பாஜக அந்நியர்கள் நடத்தும் கட்சி என்பது இங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 12:58

புலிகேசி மன்னர் குடும்பத்தால், கட்சிப் பிரமுகர்களின் குடும்பங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் ஏன் இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை ???? சீக்குமூளைகள் இதற்காக திராவிடியால் மாடலை ஏன் எதிர்ப்பதில்லை ????


பாமரன்
செப் 03, 2024 12:21

பயிற்றுவிக்கும் மொழி வேறு... கற்றுக்கொள்ளும் மொழி வேறு... ஒவ்வொரு சமூகமும் ஒரு மொழியின் மேல் பற்றுடன் இருக்கும்.. அங்கே போயி இந்த மொழியை அல்லது இந்த மொழியையும் கற்றுக்கணும்னு சொல்வதுதான் திணிப்பு... இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலமே போதும்னு நினைக்கறவங்கதான் அதிகம்... மற்ற மொழியை விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லாத பொது அதையும் சேர்த்துதான் கத்துக்கணும்னு மக்களின் உணர்வை தூண்டினால் எதிர்ப்பு பூதாகரமாக வெடிக்கும் .. கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு புரியனும்... மலர் இந்த மாதிரி பீஸ்களை நாட்டின் நலன் கருதி அடக்கி அல்லது உதாசீனம் செய்யனும்...


Svs Yaadum oore
செப் 03, 2024 13:29

பாண்டிச்சேரியில் உள்ளவன் எல்லாம் தமிழர் கிடையாது ....அவர்கள் மலையாளிகள் ....ஏற்கனவே அங்கு பூதாகரமாக வெடித்து பெரும் பிரளயம் ஏற்பட்டது .....


Senthil
செப் 07, 2024 17:13

மிகச் சரி. கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்தானே. இவங்க எவ்வளவு கூறினாலும் இங்கு எதையும் புடுங்க முடியாது என்பது அவங்களுக்கே தெரியும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 12:19

நவோதயா பள்ளிகள் ஏன் தமிழக அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றன ???? கல்வி முழுவதும் இலவசம்.குறைந்த வருமானமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கே முன்னுரிமை ..... இலவச தங்கும் வசதி உணவு ...... தரமான கல்வி 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி மட்டும் பிறகு இதரமொழி பயிற்சி ..... இதில் படித்தவர்கள்70%பேர் மத்திய மாநில மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்றனர் ...... தமிழ் பேசும் பாண்டிச்சேரியில் 3 நவோதய பள்ளிகள் உண்டு ..... அப்பள்ளிகளால் பாண்டிச்சேரியில் தமிழ் அழிந்துவிடவில்லை ..... பிறகு என்னதான் பிரச்னை ???? அப்பள்ளிகள் வந்தால் திராவிட அரசியல் வியாதிகள் நடத்தும் கல்வி வியாபாரம் படுத்துவிடும் ......


சமீபத்திய செய்தி