உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

ஆறு நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று பல இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள்; திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.ஆக.,18 கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.ஆக., 19 கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.ஆக., 20, 21ல் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridharan
ஆக 15, 2024 18:11

தினமும் கோவையில் மழை வெளுக்க போகுது என்ற அறிவிப்பு வருகிறதே தவிர, மழை வருவதற்கான அறிகுறி தெரிவதே இல்லை. இப்பொழுதும் வெயில் வாட்டி வதைக்கிறது .


வல்லவன்
ஆக 15, 2024 16:03

டுபாகூர் வானிலை மையம்


பெரிய ராசு
ஆக 15, 2024 14:41

தென்காசில வெயில் கொளுத்துது ...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ