மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.நாளை மறுதினம் முதல், 30ம் தேதி வரை, மாநில அளவில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 28ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்ச மாக, பந்தலுாரில் 9 செ.மீ., மழை பெய்து உள்ளது. மாநில அளவில் அதிகபட்சமாக, தொண்டி, நாகை, பரங்கிப்பேட்டையில் 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை, திருச்சி 36; புதுச்சேரி 35; மதுரை 34; கோவை, சேலம் 33; வால்பாறை 22; கொடைக்கானல் 18; ஊட்டி 16 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
16 hour(s) ago