உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கசாப்பு கடையில் கோவில் பசுக்கள் ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

கசாப்பு கடையில் கோவில் பசுக்கள் ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்:'தானமாக வழங்கிய பசுக்களை விற்கும் சுய உதவிக்குழு நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி வலியுறுத்திஉள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை, கோவில் நிர்வாகத்தினர், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வளர்க்க வழங்குகின்றனர். குழுக்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பெரும்பாலும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் பசுக்கள், இடைத்தரகர்களால் கசாப்பு கடைக்கு விற்கப்படுகின்றன.இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு வழங்கும் பசுக்களை பராமரிக்க முடியாத அளவுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை திறனற்று இருக்கிறது. இது, மன்னிக்க முடியாத குற்றம்.பசுக்கள் எண்ணிக்கை மற்றும் பெற்றுக் கொள்ளும் சுய உதவிக் குழுக்கள் எண்ணிக்கை, குழுவினர் வைத்துள்ள பசுக்கள் எண்ணிக்கை என விபரங்களை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.'கோவிலில் இருந்து தானமாக பெற்ற பசுவை விற்க மாட்டேன்' என, உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, பசுக்களை விற்பனை செய்யும் சுய உதவிக்குழு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
ஏப் 06, 2024 12:50

இவர்கள் குரல் கொடுத்தால் அந்த இறைவனின் காதுகளிலும் விழாது கடவுளே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் , எங்கு சென்றாலும் எதுவுமே செய்ய முடியாது இதுதான் இன்றைய மாடல் வந்தே மாதரம்


நடராஜன்
ஏப் 06, 2024 14:57

முதலில் அறம் நிலையா துறை முடக்கப்பட வேண்டும். கோவில்கள் அந்தந்த சமூகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.


பொறியாளன் இளங்கோ
ஏப் 06, 2024 11:54

கொடுமை! பெரும்பாவம்!.


முருகன்
ஏப் 06, 2024 09:52

இது போன்ற மனிதர்களை மன்னிக்க மாட்டார்


J.V. Iyer
ஏப் 06, 2024 06:16

இதற்கெல்லாம் சீக்கிரம் அனுபவிப்பார்கள் தெய்வம் நின்று கொன்னாலும் அடுத்த பாஜக அரசு இதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்காது


VENKATEAN V. Madurai
ஏப் 06, 2024 03:42

கசாப்பு கடைக்கு செல்லும் பசுக்கள் மாதிரி தான் திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடும் ஹிந்துக்களும் நிலையும் நாளை இதுதான்


முருகன்
ஏப் 06, 2024 09:53

இதில் எங்கே திராவிடம் வந்தது


VENKATEAN V. Madurai
ஏப் 06, 2024 03:40

கசாப்பு கடையில் கோவில் பசுக்கள் இதே மாதிரி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் இந்துக்களும் நிலையம்ஒன்றுதான்


Dharmavaan
ஏப் 06, 2024 03:39

கோயில் சொத்தை திருடும் கொள்ளைக்கூட்டம் அறம் கெட்ட துறை சுய உதவி குழுக்களுக்கு தள்ளிவிட யார் அதிகாரம் கொடுத்தார்கள்


VIKRAM G
ஏப் 06, 2024 02:40

அதிகமா மாட்டு கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் இதெல்லாம் தினமலர் போடாது ????


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி