மேலும் செய்திகள்
திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது
08-Mar-2025
திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் கோவிலில் அபிராமி அம்மன் பத்மகிரிஷ்வரர் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சென்ற ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், நிர்வாகிகளை சந்திக்கவும் திருப்பூரில் இருந்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் செல்ல ஆயத்தமாகினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு, மாநில தலைவர், மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார் உட்பட, 200க்கும் மேற்பட்டோரை திருப்பூர் மாநகர போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
08-Mar-2025