உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுடன் இணைக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் * நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., பேட்டி

அ.தி.மு.க.,வுடன் இணைக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் * நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., பேட்டி

திருநெல்வேலி:''அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,விற்கு இணைக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்,'' என, திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக தமிழக கட்சிகள் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தினமும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பள்ளி வாசலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. தமிழக அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருட்கள் நடமாட்டம் மிக அதிக அளவில் உள்ளது.எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.,வில் இணைந்த விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். எனக்கும் கட்சியில் சேர்ந்ததும் கட்சிப்பதவி தரப்படவில்லை தான். இரண்டரை ஆண்டுகள் பதவி இருக்கும் போது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்த விஜயதாரணிக்கு நிச்சயம் கட்சிப்பதவி வழங்கப்பட வேண்டும். அவருக்கு பதவி வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் ஒரு ட்ரில்லியன் டாலரை நோக்கி தமிழகம் செல்லுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார்நாகேந்திரன், ''முதலீடுகள் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் என்பது சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை