உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன்: ஸ்டாலின்

அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன்: ஸ்டாலின்

சென்னை: அரசியல் பேச வேண்டுமானால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்டாலின் அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன் என பதில் அளித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து துறைகளை சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கருணாநிதி. உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவேண்டும். கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என்பதை எம்.ஜி.ஆர்.,சிவாஜி கூறுவர். பலருக்கும் தாய் போல செயலாற்றிய கருணாநிதியை தாய் என அழைப்பது சாலப்பொருத்தம். கண் அசைவை புரிந்து கொண்டு நிறைவேற்றுபவர் வேலு என கருணாநிதி கூறுவார். இப்போதும் எனக்கும் அது போலவே செயல்மிக்க அமைச்சராக செயல்பட்டு வருகிறார். என்ன வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ,வ.வேலு கட்டுரை தொகுப்பின் கருத்துக்களே புத்தக தலைப்புகளாக உள்ளன. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்த போது எனக்கு வியப்பாக இருந்தது.கருணாநிதியின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. என்னை விடவும் வயதில் மூத்தவரான ரஜினியின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராக இருப்பேன் .இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட ரஜினி பேசும் போது அரசியல் பேச வேண்டுமானால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என கூறி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ராமு
ஆக 27, 2024 14:08

எந்த கடைல சார் வாங்குனிங்க


ManiK
ஆக 25, 2024 15:46

ஏ வா ஒரு கொத்தடிமைனு சொல்லாமல் சொல்கிறார் ச்டாலின்


Venkatasubramanian krishnamurthy
ஆக 25, 2024 14:03

எதே..... கருணாநிதியின் தாய் எம்.ஜி.ஆர்., சிவாஜியை பேணி வளர்த்தார்களா? இதென்னடா புதுப் புரளியா இருக்கு?


ஆரூர் ரங்
ஆக 25, 2024 14:41

ஜோக்கை ரசிக்கணும். ஆராயக்கூடாது.


ஆரூர் ரங்
ஆக 25, 2024 12:45

தலைக்கு உள்ளே உள்ளது தெரியாத மாதிரி உஷாரா இருங்க. தலப்பா பத்திரம்.


N.Purushothaman
ஆக 25, 2024 12:21

ஐநூறுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்த போது என்னமா உஷாரா இருந்தாரு ? விமர்சனம் பண்றவங்களை எல்லாம் நைட்டோட நைட்டா தூக்குறது , என நெறைய இருக்கு ....நாங்க என்ன பாமரனா ? எதை சொன்னாலும் நம்பிகிட்டு இருக்குறதுக்கு ?


சுலைமான்
ஆக 25, 2024 11:21

ஆமாம்.... கள்ளச்சாராயம்..... வேங்கைவயல்..... மின்கட்டணம்.....இதுல எல்லாம் உஷாரா தான் இருப்பாரு


விக்கிரபாண்டியன்
ஆக 25, 2024 09:45

கள்ளச்சாராய சாவு நடந்தால் உசாரா இருந்து பத்து லட்சம் குடுப்பேனே...


Sathyanarayanan Sathyasekaren
ஆக 24, 2024 23:03

ஆமாம் ஹிந்துக்களை இளக்காரமாக, இழிவாக பேசும்போது கவனமாக பேசுவார். அந்நிய நாட்டு மத நிகழ்ச்சிகளில் மட்டும் தான் அப்படி பேசுவார்.


krishna
ஆக 24, 2024 22:45

AYYO INDHA KOMAALI THOLLAI THAANGA MUDIYAVILLAI. KOMALI ARNMANAIKKU VANDHAAL ARANMANAI CIRCUS KOODARAM AAGUM. NAMMA ETHIRAJ VAJRA VELU CYCLE RICKSHAW OTTI KONDU IRUNDHAAR.IPPO KATTUMARAM UBAYATHIL LATCHAM KODIGALIL PURALGIRAAR.DRAVIDA MODEL ENDRAALE AATAYA POTTU SURUTTUVADHU DHAANE


chandrakumar
ஆக 24, 2024 22:32

ஆமா ஆமா உஷாரா தான் இருக்கனும் இல்லைன்னா எப்படி பிழைப்பு தனம் நடக்கும்... பெரிய சாம்ராஜ்ஜியம் ஆச்சே....


முக்கிய வீடியோ