உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்

மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ‛மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டங்கள நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் லுார்து பிரான்சிஸ், தன் அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின் கூட, தி.மு.க., அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலுார் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளை தாக்குவது தொடருகிறது. அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது. தமிழகம் முழுதும் ஆயுதக் கலாசாரம் நிலவுகிறது. போலீஸ் துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் தலையாய கடமையான சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதில், தி.மு.க., அரசு முழுமையாக தோல்வியுற்றிருக்கிறது.தி.மு.க., அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்க்கட்சியாக, மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூன் 18, 2024 17:14

அடுத்த தேர்தல் வரை இப்படி ஏதாவது செய்து கொண்டு இருந்தால் தானே பொழுது போகும், என்ன செய்வது?


Sridhar
ஜூன் 18, 2024 12:10

முதல்ல ED விசாரணை என்னவாயிற்றுன்னு சொல்லுங்க. கலெக்டர்களை விசாரித்தார்கள், அப்புறம் மேற்கொண்டு ஒண்ணுத்தையும் காணுமே? எதோ ஜூன் மாதம் சில அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்று உங்க ஆட்கள் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்கள்? திருட்டு கும்பல் மொத்தமும் சந்தோசமா இருக்கறதோட இல்லாமல், மேற்கொண்டு ஊக்கத்தோடு அதே விசயங்களை தொடர்றாங்க போலருக்கே


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 18, 2024 09:59

இவனுங்க லஞ்சம் வாங்குவதும் அவனுக வெட்டுறதும், கொலை செய்வதும் திராவிடிய மாடலில் கண்கொள்ளாக்காட்சி. அனுபவியுங்கள் மக்களே.


muthukumar
ஜூன் 18, 2024 09:50

அண்ணாமலை அண்ணா உங்க பேரை கேட்டாலே திமுக அல்லக்கைகள் அலறி ஓடுறாங்க . உங்கள் வேட்டை தொடரட்டும் . சத்தம் இல்லாமல் ஒரு கூட்டமே உங்கள் பின்னால் இருக்கு


Narayanan Muthu
ஜூன் 18, 2024 12:01

அண்ணாமலை mind வாய்ஸ் "உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுவானுங்க போலெ இருக்குதே. "


Sampath Kumar
ஜூன் 18, 2024 09:05

நடந்து நடந்து நீரையெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போவாய் அதுனால ஆட்டம் போடு


jaya
ஜூன் 18, 2024 11:11

யப்பா, மணல் கேசா நீ .


Bala
ஜூன் 18, 2024 12:14

அநியாயமா கருத்து பதிவிடாதீர்கள். பேய் ஆட்டம் போடுவது, அராஜகம் பண்ணுவது, கொலைமுயற்சி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைக்கு முற்படாதது தமிழக ஆளும்கட்சிதான் என்று மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது


Devanand Louis
ஜூன் 18, 2024 08:38

மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகம் ஊழியர்களின் அட்டகாசகங்கள் - வீட்டுமனை பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்து பொது மக்களை அலைக்கழித்து பெரிய லஞ்ச பணம் பெரும் கொள்ளைக்கூடாரம் மாக திகழ்கிறது தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சியின் நற்பெயரை கெடுக்கும்விதமாக நடந்துகொள்கிறார்கள் .பொதுமக்களின் வேண்டுகோள்-Thaguntha நடவடிக்கை தேவை என்பதுதான் .தினமலரின் உதவிகள் தேவை .


Durai
ஜூன் 18, 2024 08:23

இதுபோல் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சினைகளுக்காக தோள் கொடுங்கள். வெற்றி உங்களைத் தானாகவே தேடிவரும். மற்ற பாஜக தலைவர்களையும் கள நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடச் சொல்லுங்கள்.


Kasimani Baskaran
ஜூன் 18, 2024 07:27

உபிஸின் அமோக ஆதரவில் மண்ணள்ளுவது திராவிட பாரம்பரியம். விவசாயத்தை அழிப்பது திராவிடர்களின் முக்கிய குறிக்கோள். கட்சியை தீம்க்காவில் எப்படி லாவகமாக இணைப்பது என்று சிந்தித்து இருக்கும் எடப்பருக்கு மணல் அள்ளுவதில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அரசு அலுவலர்களை அடக்கி வைப்பது நல்லது என்பது அவரது கருத்தும் கூட. அரசு செலவில் மண்ணள்ள குத்தகை விடாமல் ஏன் இப்படி ரெளடிகளை விட்டு மண்ணள்ளி பிரச்சினையில் சிக்குகிறார்கள் என்று எடப்பாடி சிந்தித்து அதன் பின் அவர் முடிவை அறிவிப்பார்.


hariharan
ஜூன் 18, 2024 07:02

ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திமுக ஃபைல் வெளிவரும் என்று தம்பட்டம் அடித்தாரே அண்ணாமலை. என்ன ஆயிற்று? அவரும் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு விட்டாரோ? சும்மா பூச்சாண்டி காட்றதே நடக்கிறது.


Priyan Vadanad
ஜூன் 18, 2024 05:00

போட்டோவை கொஞ்சம் எடிட் செய்து போடுங்களப்பா இவர் போராட்டம் ஏற்பாடு செய்து விட்டால் பிரதமரும் அதில் பங்கெடுப்பாரா? தினமலர்தான் மலைக்கு கொஞ்சம் விளம்பரம் தேடித்தருது.


மோகனசுந்தரம்
ஜூன் 18, 2024 07:11

எல்லா ஆர் எஸ் பி மீடியாவும் திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் பொழுது எங்கிருந்து எதிர்க்கட்சியினரை செய்திகளில் சேர்ப்பார்கள். எல்லோரையும் விலைக்கு வாங்கி வைத்துள்ளது திமுக.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை