உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வினர் வந்தால் தி.மு.க., வலிமை பெறும்: சட்ட அமைச்சர் சொல்கிறார்

அ.தி.மு.க.,வினர் வந்தால் தி.மு.க., வலிமை பெறும்: சட்ட அமைச்சர் சொல்கிறார்

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்வதற்கு, அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்ந்து எடுத்துரைக்க முதல்வர் குழு ஒன்று அமைத்துள்ளார். அந்த குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில், தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. இனி, அ.தி.மு.க., ஆபத்தான சூழலை சந்திக்கும். என கூறியிருந்தேன். அது தற்போது நடந்து கொண்டு உள்ளது. கொங்கு மண்டலத்தை சார்ந்த கட்சி நிர்வாகிகளே, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதேபோன்று டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இனி, அ.தி.மு.க.,வில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்திருக்கும் அக்கட்சியினர் தி.மு.க.,வுக்கு வர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்களை அரவணைக்கத் தயாராக உள்ளார். அ.தி.மு.க.,வினரும் தி.மு.க.,வில் இணைந்தால், கட்சி இரு மடங்கு வலிமை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JANA VEL
ஜூலை 12, 2024 12:45

ஐயோ பாவம் திமுகவுக்கு சொந்த பலம் இப்போ இல்லே. என்று சொல்றாரு


veeramani
ஜூலை 12, 2024 08:41

உங்களை போ ல என்னும் மனப்பான்மை நன்று பாரதராதனா பொன்மனச்செம்மல் ஏம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியில் சேர்ந்து பதவி அனுபவித்து பின்னர் மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் செல்வாக்கையுள்ளனர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை