மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு
11-Sep-2024
வி.சி.,க்கள் தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்து அரசியல் செய்கின்றனர். அது, பொது அரசியலா அல்லது சுய அரசியலா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் அரசியல் நாடகம் என்பது தெரிந்து விட்டது.மது ஒழிப்பு என்று வந்த பின், மதம், ஜாதி கலப்பின்றி அனைத்து தரப்பினரையும் அழைத்து மாநாடு நடத்துவதே சரி. மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை எனக் கூறி, ஜாதி அமைப்புகளைச் சேர்ந்தோரை இழிவுபடுத்துக்கிறார் திருமாவளவன். புதிதாக கட்சி துவங்கி இருக்கும் நடிகர் விஜய்யும் தனித்து நிற்க மாட்டார். தனி அமைப்பு நடத்தும் நான் தனித்து நின்றால் கூட, எனக்காக ஓட்டுப் போடக் கூடிய நபர் என்னுடைய மனைவியாக மட்டும் தான் இருப்பார். இது விஜய்க்கும் நன்கு தெரியும். அதனால், அவர் தனித்தெல்லாம் போட்டியிட மாட்டார். நடிகர் கருணாஸ், தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
11-Sep-2024