உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு தகவல்

கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கார்களில் கட்சி கொடி கட்டப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தனியார் வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பில் இருந்து, டாக்டர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் கே.சீனிவாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று உத்தரவிட்டது.இந்த வழக்கு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை, ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி கூறியதாவது:கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் வலம் வருகின்றன. கார்களில் இன்னும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அது முறைப்படுத்தப்படவில்லை. நகர சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனி வழி ஏற்படுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க, பள்ளி, கல்லுாரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஜூன் 15, 2024 12:38

தெருவில் அரசியல் தலைவர் சிலைகள், சாலை ஓர கொடி கம்பங்கள், வண்டியில் கொடி பறப்பது இதை எல்லாம் கவனிக்க வேண்டிய கடமை , பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறதா ? இல்லையா?


GMM
ஜூன் 15, 2024 07:16

கட்சி கொடி கார்கள் மீது என்ன, எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டது?. வாகன பதிவு பொறுப்பு மாநில வட்டார போக்குவரத்து துறை. போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க பதிவில் அவர்கள் பங்கு இல்லாததால், வட்டார போக்குவரத்து அதிகாரி மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். போலீஸார் குற்ற விவரங்களை மட்டும் தான் RTO விற்கு அனுப்பலாம். போலீஸார் வழக்கு பதிவு செய்து அலைந்தால், மக்கள், பொது சொத்து பாதுகாக்க முடியாது.


N Annamalai
ஜூன் 15, 2024 06:07

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ப்ரெசிடெண்ட் என்று பெரிய பலகை வைத்து செல்வது ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ