உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் தேர்தலில் ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ.,வசம் சென்ற எதிர்ப்பு ஓட்டுக்கள்

கரூர் தேர்தலில் ஓட்டு சதவீதம் உயர்வு பா.ஜ.,வசம் சென்ற எதிர்ப்பு ஓட்டுக்கள்

கரூர்:கரூர் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்கள், பா.ஜ.,வுக்கு சென்றுள்ளது.கரூர் லோக்சபா தொகுதியில் கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதியில், 28 ஆண்டுகளாக பா.ஜ., போட்டியிடவில்லை. 2006, 2011 சட்டசபை தொகுதிகளில் ஒரு சில தொகுதியில் போட்டியிட்டது. 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வேடசந்துாரில், 2,092, அரவக்குறிச்சியில், 3,162, கரூரில், 3,995, கிருஷ்ணராயபுரத்தில், 5,673, மணப்பாறையில், 4,154, விராலிமலையில், 263 ஓட்டுக்கள் என மொத்தம், 19 ஆயிரத்து, 339 ஓட்டுக்களை பெற்றது. இதில், 1.99 சதவீதம்.இந்த லோக்சபா தேர்தலில் வேடசந்துார் சட்டசபை தொகுதியில், 18,330, அரவக்குறிச்சி, 19,978, கரூர், 20,089, கிருஷ்ணராயபுரம், 13,595, மணப்பாறை, 17,822, விராலிமலை, 11,703 என மொத்தம், 1 லட்சத்து, 2,482 ஓட்டுக்களை பா.ஜ., பெற்றுள்ளது. இது, 9.05 சதவீதம். 2016 தேர்தலை விட, 7.06 ஓட்டு சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. கரூர் லோக்சபா தொகுதி கரூர், மணப்பாறை தவிர அனைத்து தொகுதிகளும் கிராம பகுதிகள் அடங்கியவை. அமைப்பு பலம் இல்லாமல் ஓட்டு வங்கி உயர்ந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.கடந்த, 2021 சட்டசபை தேர்தலை விட, 2.78 சதவீதம் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சி கூடுதலாக பெற்றுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை விட காங்., 15.81 சதவீதம் இந்த தேர்தலில் இழந்துள்ளது. அதில், 7.58 சதவீதம் ஓட்டுக்களை அ.தி.மு.க., வாங்கியுள்ளது, மீதமுள்ள, 8.23 சதவீத ஓட்டுக்கள், பா.ஜ.,விடம் சென்றுள்ளது. இதுவரை தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்ற நிலை மாறி, பா.ஜ.,வுக்கு செல்கிறது என்பது புள்ளி விபரம் மூலம் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை