மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
விருதுநகர் : 'கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு மறைமுக தடை ஏற்படுத்தும் நியமன உச்சவரம்பை தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொது செயலாளர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தியுள்ளனர்.அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கருணை பணி நியமனம் என்பது பணியில் இருக்கும் போது இறந்த அரசு ஊழியர்களின் மறைவுக்கு பின் சிரமத்திற்கு உள்ளாகும் அவர்களது குடும்பத்திற்கு உதவ வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படுவதாகும். இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திட் டம். 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் வெளியான கருணை பணி நியமனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையில் 'சி', 'டி' தொகுதிகளில் உள்ள பணியிடங்கள் மட்டுமே கருணை அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் குரூப்- சி பணி நிலையில் அதாவது இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., சர்வேயர் போன்ற அனைத்து வகையான பணியிடங்களுக்கும் ஒரு துறையில் கருணை பணி நியமனம் செய்யப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் குரூப் 'சி'ல் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கு குறையும் வரை குரூப் 'சி'ல் நியமனம் வழங்க முடியாது என ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த 5 சதவீதம் உச்சவரம்பால் மறைமுகமாக குரூப் - 'சி' ல் கருணை அடிப்படை பணி நியமனம் மனித நேயமற்ற முறையில் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குரூப் 'சி' ல் கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய நியமனம் நடந்து வந்த நிலையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மூலம் நியமனம் நடக்கவில்லை. தற்போது லோக்சபா தேர்தலையொட்டி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது.மூன்றாண்டுக்கு 30 ஆயிரம் பேர் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் 6,244 பேர் மட்டுமே தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல் அரசு ஊழியர்களிடம் அச்சத்தையும், அரசின் மீது கடும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு மறைமுகத் தடையை உருவாக்கும் நியமன உச்சவரம்பை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago