உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவுக்கு மறைமுக விளம்பரம்; கார் பந்தயத்தால் கண்ட பலன்; அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மதுவுக்கு மறைமுக விளம்பரம்; கார் பந்தயத்தால் கண்ட பலன்; அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை: பார்முலா -4 கார் பந்தயம் நடக்கும் தீவுத்திடலை சுற்றி, மது பானத்துக்கு மறைமுகமாக விளம்பரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மதுவால் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என்பதால் அவற்றை பொதுவெளியில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரம் செய்வது, குடிப்பழக்கத்தை அதிகரித்து சமூகத்தை சீரழிக்கவே செய்யும் என்பதால் இத்தகைய தடையை அரசு கொண்டு வந்துள்ளது.ஆனால், இந்த தடையை நுாதனமாக மீறும் வகையில், மது உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மது பிராண்ட் பெயரிலேயே, தண்ணீர், சோடா போன்றவற்றை தயார் செய்து, அவற்றையும் விற்பனை செய்வது; அவற்றுக்கு விளம்பரம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.இதன் மூலம், தங்கள் தயாரிப்பு தண்ணீருக்கும், சோடாவுக்கும் நேரடி விளம்பரம், மதுவுக்கு மறைமுக விளம்பரம் செய்கின்றனர். இத்தகைய தவறுக்கு, தமிழக அரசும், கார் பந்தயம் மூலம் உடந்தையாக இருக்கிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.மதுவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் பா.ம.க., தலைவர் டாக்டர் அன்புமணி, நேற்றே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தன் ஆட்சேபத்தை பதிவு செய்திருந்தார்.மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கை.ஆனால், இன்று வரை அந்த விளம்பரங்கள் தீவுத்திடல் பகுதியில், கார் பந்தயம் நடக்கும் இடங்களில் அப்படியே உள்ளன. இதனால், கார் பந்தயம் மூலம் மதுவுக்கு மறைமுக விளம்பரம் செய்வது ஒன்று தான் கண்ட பலன் என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.அன்புமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேரடியாகவும், மறைமுகமாகவும் மது, புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், பான் மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 2022 ஜூனில் உத்தரவிட்டுள்ளது.ஆனால், சென்னையில் 'பார்முலா 4'கார் பந்தயம் நடக்கும் தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில், பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில்,'கிங் பிஷர்' மது வகையின் விளம்பரங்கள் மிகஅதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.இவை பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த விளம்பரங்களை தமிழக அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலன் கருதி, மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anandadasse
செப் 04, 2024 18:51

ஜாதியும் மதுவைவிட மோசம் அதைவிட நீங்க விளம்பரம் தேடுவது


Gurusamy
செப் 02, 2024 20:57

திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்.


venugopal s
செப் 01, 2024 14:54

மது விளம்பரங்களுக்கு தடை விதித்தது முதல் இது போன்ற அதே பிராண்ட் சோடா மற்றும் மினரல் வாட்டர் விளம்பரங்கள் எல்லா இடங்களிலும் அனுமதிக்கப் பட்டுள்ளது நடைமுறை வழக்கம் தான்!


Sridhar
செப் 01, 2024 12:56

இந்தமட்டுக்கு கஞ்சா மெத் போன்றவற்றுக்கு விளம்பரம் வைக்காம இருக்கோமே அத பாத்து சந்தோசப்படுங்க.


Kumar Kumzi
செப் 01, 2024 12:54

டாஸ்மாக் நாட்டில் மக்களை திராவிஷ மாடல் மதுவுக்கும் ஓவாவுக்கும் அடிமைப்படுத்தி சுயமா சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துவிட்டனர்


Sridhar
செப் 01, 2024 12:52

எங்களுக்கு வேண்டியது துட்டுதாங்க, நீங்க வேணும்னா மக்கள் கிட்டப்போயி இந்த விளம்பரத்தை பாத்து ஏமாந்து குடி பழக்கத்துக்கு ஆளாகாதீங்கன்னு சொல்லுங்க. எதுவுமே மக்கள் தான் முடிவு பண்ணுவாங்க. மக்கள் எங்களுக்குத்தான் ஒட்டு போட்ருக்காங்கங்கறத மறந்துடாதீங்க.


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 11:43

லாட்டரி , மது, போதைப்பொருட்கள் வரிசையில் கார் பந்தயம் என்னும் சூதாட்டம் .... திராவிட மாடலுக்கு நன்றிங்கோ .....


Saravanakumar Panneerselvam
செப் 01, 2024 11:42

சென்னையில் மட்டுமே இருந்த விளம்பரம், செய்தியால் அனைவருக்கும் இலவச விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


jayvee
செப் 01, 2024 10:59

இது ஒன்றும் புதிதல்ல.. தொலைக்காட்சிகளில் இன்றளவும் மினரல் வாட்டர் என்ற பெயரில் அதே ப்ராண்டில் விளம்பரம் வருவது போலத்தான் இதுவும்.. முதலில் OTT தளங்களை சென்சார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.. பெண்கள் குழந்தை, கிழவி என்று அனைவரின் கையிலும் புகை மற்றும் மது.. அரைகுறை ஆடைகள், அசிங்கமான வசனங்கள், பாலியல் காட்சிகள் .. யூடியூபில் இதே கதைதான்.. கூடவே கருத்தடை சாதனை விளம்பரம் என்ற பெயரில் மலையாள பட காட்சிகள் .. உதவாக்கரை பிஜேபி கலாச்சாரத்தை காப்போம் என்று கூறிக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது


Ganapathy
செப் 01, 2024 10:35

ஜெயலலிதா ஆட்சிக்கு "வளர்ப்புமகன்" திருமணம் சாவுமணி அடித்தது. தொளபதி ஆட்சிக்கு "கள்ளக்குறிஞ்சி வேங்கைவாசல் கார்பந்தயம்" என பல சாவுமணி காத்திருக்கின்றன. ஆனா இப்ப எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீண்டும் மக்கள் மீண்டும் அண்ணாமலையை தோற்க்கடித்து இவனுங்களுக்குத்தான் ஓட்டு போடுவானுங்க. இதான் நிதர்சனம். எல்லாமே பணம் படுத்தும் பாடு.


புதிய வீடியோ