மேலும் செய்திகள்
செஸ் போட்டியில் சாய் விஸ்வேஷ் அசத்தல்
09-Aug-2024
சிவகங்கை:அபுதாபி மற்றும் பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சகோதரர்கள் எம்.தினேஷ்ராஜன் 20, தங்கப்பதக்கம், எம்.பிரனேஷ் 18, சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.அபுதாபியில் 30வது சர்வதேச அளவில் செஸ் போட்டி நடந்தது. இதில் 83 நாடுகளில் இருந்து 219 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் காரைக்குடி எம்.தினேஷ்ராஜன் பங்கேற்று 9 சுற்று முடிவில் 8 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். மதிப்பீடு புள்ளியில் 2,200 யை கடந்து கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை தட்டி சென்றார்.பிரான்சில் நடந்த சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 33 கிராண்ட் மாஸ்டர்கள், 47 இன்டர்நேஷனல் மாஸ்டர்கள், 40 பிடே மாஸ்டர்கள், 9 கேண்டிடேட் மாஸ்டர்கள் உட்பட 177 வீரர்கள் பங்கேற்றனர்.இந்தியா சார்பில் காரைக்குடி இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற எம்.பிரனேஷ் பங்கேற்றார். 9 நாட்களாக 9 சுற்றுக்களாக போட்டிகள் நடந்தன. இறுதி சுற்றில் கிராண்ட் மாஸ்டர் பி.இனியனை 9 க்கு 7.5 புள்ளிகள் பெற்று எம்.பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
09-Aug-2024