உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் கோலாகல துவக்கம்!

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் கோலாகல துவக்கம்!

பழநி: பழநியில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக., 24) கோலாகலமாக துவங்கியது. இன்றும், நாளையும் பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் இந்த மாநாடு நடக்கிறது.

மாநாடு துவக்கம்

இன்று காலை (ஆகஸ்ட் 24) குத்துவிளக்கு ஏற்றுதலுடன் அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம் எம்.எல்.ஏ., செந்தில் குமார் முன்னிலையில் மாநாடு துவங்கியது. மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.தொடர்ந்து 100 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில், சேவல், மயில், வேல் உடன் கூடிய முருகப்பெருமான் கொடியேற்றி வைத்து, மாநாடு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.மாநாட்டில் சொற்பொழிவு அரங்கம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக்கண்காட்சி, 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு விருத்தினர்கள்

மாநாட்டில் நடக்கும் ஐந்து ஆய்வரங்கங்களில் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். நீதிபதிகள், ஆதினங்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.முருகன் கோவில் குறித்த 8 அலங்கார வளைவுகள், மலைக்கோயில் முகப்புடன் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசாத பை

வாகனங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கரநாற்காலிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க வருவோருக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டிற்கு வருவோருக்கு பஞ்சாமிர்தத்துடன் கூடிய பிரசாத பை வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

அனுமதி இலவசம்

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி இலவசம். பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் மாநாட்டில் சிரமமின்றி பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

God yes Godyes
ஆக 24, 2024 15:05

தமிழில் தான் முத்தமிழ் உள்ளதா.மற்ற மொழிகளில் இல்லையா. கி.மு.45௦௦ களில் எகிப்திய வனங்களில் அப்பல்லோ என்ற அழகிய மூலிகை மருத்துவ வாலிபன் மூலிகைகளை தேடி வரும் போது மூலிகைகளை பறிக்க மூலிகை கிடைக்கும் வனங்களை தேடி வானில் பறந்து சென்ற அகத்தியர் கண்ணில் வாலிபன் எதிர் பட அவ்வாலிபனை சிந்து சமவெளி வாழ் எகிப்திய ட்ரெம்மிலி பேச்சு மொழி தமிழருக்கு மருத்துவ சிகிச்சையை தன் தொடு உணர்வில் அளிக்க கொண்டு வந்து முருகனாக வரித்தார்.


T.sthivinayagam
ஆக 24, 2024 12:04

உலகை முருகன் காக்க மாநாடு சிறக்க ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள்


T.sthivinayagam
ஆக 24, 2024 12:02

உலகை முருகன் காக்க, மாநாடு சிறக்க ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள்


KRISHNAN R
ஆக 24, 2024 10:54

முருகா...பத்திரம்...


Palanisamy Sekar
ஆக 24, 2024 10:51

இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்களில் ஒருவருக்காவது கந்தசஷ்டி கவசம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா? இதெல்லாம் ஓட்டுக்காக போடுகின்ற வேஷம். பக்தர்களே உஷாராக இருங்கள். பக்தி இவர்களிடம் வேஷம் போட்டுவருகின்றது ஓட்டுப்போடுவாங்க என்கிற நம்பிக்கையில். கந்தசஷ்டி கவசத்தை படுகேவலமா விமர்சித்த நபர் இன்னும் திமுகவில் தான் இவர்களின் அரவணைப்பில் இருக்கின்றான் . இவர்கள் போடுவது ஓட்டுக்கான வேஷம். இறக்குமதி மதங்களின் பக்தர்கள் இவர்கள். இன்னும் இவர்களை நம்மம்மம்மி ஓட்டளித்தல் நாளை முருகனையே கடத்திகொண்டுபோய் விற்றுவிடுவார்கள்


G Mahalingam
ஆக 24, 2024 10:47

வோட்டு வாங்குவதற்கு அங்கு ஒரு திக குத்து இங்கு ஒரு சனதான குத்து. கடைசியில் மக்களை இளிவாயனாக திமுக ஆக்கி கொண்டு இருக்கிறது.


N Sasikumar Yadhav
ஆக 24, 2024 10:32

இந்துமத துரோக கட்சியான திமுகவின் அரசன் இளவரசன் ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லையா


Balasubramanyan
ஆக 24, 2024 10:25

Why ministers. Have they know anything about Lord..funny


sridhar
ஆக 24, 2024 10:09

பழனி முருகன் தற்காலிகமாக கிளம்பி திருச்செந்தூர் போய் விட்டார் , இது முடிந்தவுடன் தான் வருவார்.


பேசும் தமிழன்
ஆக 24, 2024 10:01

இது திருட்டு திராவிட மாடல் ஆட்கள் நடத்தும் தேர்தல் ஓட்டு நாடகம் போல் தெரிகிறது.... எல்லாம் பிஜெபி படுத்தும் பாடு.... அவர்கள் தான் இந்து மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.... அதனால் தான் இப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை