உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் ரத்த அழுத்தம் புதிய படிப்பு அறிமுகம்

உயர் ரத்த அழுத்தம் புதிய படிப்பு அறிமுகம்

தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் வாயிலாக, 40 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர். முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைப்பிடித்தல், மது குடித்தல், காற்று, தண்ணீர், ஒலி, ஒளி மாசு ஆகியவற்றின் வாயிலாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.எனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 'உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை' தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு துவங்கப்பட உள்ளது. திறமையான உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்களை உருவாக்குதல், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல், அவற்றால் ஏற்படும் நோய் மற்றும் மரணத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட உள்ளது.--- கே.நாராயணசாமிதுணைவேந்தர்,தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ