உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உசிலம்பட்டியில் பணமழை அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

உசிலம்பட்டியில் பணமழை அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் நேற்று மாலை 6.15 மணியளவில் ரூ. 500 நோட்டுகள் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. 50 மீட்டர் தொலைவிற்கு பரவிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இந்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா, அல்லது தவறி கீழே விழுந்ததா, எவ்வளவு பணம் விழுந்தது என அப்பகுதியில் கிடைத்த கேமரா பதிவுகளின் அடிப்படையில் உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த பணம் குறித்து யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

john
ஜூலை 07, 2024 19:25

எங்க ஏரியாவுலமட்டும் இந்த மாதிரி நடக்க மாட்டேங்குது, பாவுங்க எங்க ஏரியாவிலேயும் கொஞ்சம் போடுங்க


SenthilKumar S
ஜூலை 07, 2024 15:00

தேர்தல் எதுவும் இல்லையே. பின் ஏன் இப்படி? ஒருவேளை ஐநூறு ரூபாய் நோட்டும் மாறப்போகிறதா?


வாய்மையே வெல்லும்
ஜூலை 07, 2024 11:11

நான் எதிர் பார்த்தது செல்லா காசு இரண்டாயிரம் ருபாய் ரோஸ் கலர் நோட்டுக்கள் . ஆக ஆக இந்த ஆட்டம் செல்லாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை