உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள்; பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடி நிதி நிறுவன இயக்குநர்கள்; பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்குகளில் சிக்கிய முக்கிய இயக்குநர்கள் பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால், விசாரணையில் தேக்கம் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த, ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், 2 லட்சம் முதலீட்டாளர்களிடம், 14,000 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்துஉள்ளன. ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா; ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன இயக்குநர்கள் லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.இவர்களில், ராஜசேகர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், 2023 டிசம்பரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தமிழகம் அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓராண்டாகியும் பலன் கிடைக்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்து தலைநகர் பாங்காகில் இருந்து, நாடு கடத்தப்பட்டு, மேற்குவங்கம் வந்த ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டார். ஆனால், ராஜசேகர் மனைவி உஷா பதுங்கி இருக்கும் இடம் குறித்து துப்பு துலக்க முடியவில்லை.அதேபோல, ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர், எந்த நாட்டில் இருக்கின்றனர் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், நிதி நிறுவன மோசடி வழக்குகள் விசாரணை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பணத்தை திருப்பித் தர முடியாத நிலை நீடிக்கிறது.இது குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு தப்பிய நபர்களை, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் வாயிலாக தேடி வருகிறோம் என, ஆண்டு கணக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவிக்கிறோம். போலீசார் முக்கிய நபர்களை தப்பிக்க விடுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

DUBAI- Kovai Kalyana Raman
மார் 03, 2025 16:52

ஏன் சௌகித்தார் மாடல் ..விடியலார் மாடல் னு சொல்லு


Natchimuthu Chithiraisamy
மார் 03, 2025 14:02

திருப்பூரில் ஒருவருக்கு அவன் தொழிலுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்காமல் தன் ப்ரொபேர்ட்டிக்கு தகுந்தாற் போல் கடன் வாங்கி வட்டி தொகை அதிகமாகி சொத்தும் போவது போல் இந்த மனிதர்கள் ஒருவனை வெளிநாடு போகும் அளவுக்கு வாழவைத்து விட்டு இப்பொழுது கேட்டால் அவன் வாழ்க்கை கஷ்டப்படும் என்பதை நினைத்து பார்க்கவும். தவறான செயலை செய்ய துண்டியவர்கள் 14000 கோடி கொட்டி கொடுத்த மனிதர்கள்.


sridhar
மார் 03, 2025 09:12

இன்னைக்கு 100 ருபாய் கொடு , நாளைக்கு 1000 ரூபாயா வாங்கிக்க என்று எவனாவது சொன்னா நம்பும் அறிவிலி முதலீட்டாளர்கள் திருந்தவே மாட்டார்கள். இத்தனைக்கும் இது ஆயிரத்தி ஒன்றாவது மோசடி . நாளைக்கும் மோசம் போவார்கள் , பிறகு போலீசிடம் போவார்கள் .


Barakat Ali
மார் 03, 2025 08:30

புடிக்க முடியாம திணறல் எல்லாம் இல்ல .... வாங்குன கட்டிங் க்கு விசுவாசம் .....


அப்பாவி
மார் 03, 2025 08:14

போறாங்க விடுங்க. இனிமே அவிங்களை புடிச்சி, கோர்ட்டுலே வழக்கு பதிஞ்சு, 30000 பக்கத்துக்கு குத்தப் பத்திரிகை தயார் செஞ்சு நீதிமன்றம் வாசிச்சு தீர்ப்பு சொல்றதுக்குள்ளே 2075 ஆயிடும். இதுதான் சௌக்கிதார் மாடல்.


Subburamu Krishnasamy
மார் 03, 2025 08:00

Greedy peoples alone lost their illegal money. Persons investing in dubious firms will definitely experience such cheating incidences. Already such cheating firms might have siphoned money to other fake companies. It will be very difficult to recover the money


VENKATASUBRAMANIAN
மார் 03, 2025 07:08

காவல்துறையின் மெத்தனம். நீதிமன்றங்கள் அவர்களது சொத்துக்களை விற்று நேரடியாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாமே.


மால
மார் 03, 2025 07:01

பணம் போடும் போது போலிசு கிட்ட கேட்டீங்கள போடலாமானு இப்ப ஒப்பாரி அனுபவி


Rangarajan Cv
மார் 03, 2025 07:48

Will police have any knowledge on financial antecedents???


R.RAMACHANDRAN
மார் 03, 2025 06:58

கணக்கில் காட்டாத கள்ள பணத்தை இரகசியமாக கந்து வட்டிக்கு முதலீடு செய்தவர்களும் குற்றவாளிகளே அவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து கள்ள பணத்தை அரசு நிதியத்தில் சேர்த்தால் தான் இத்தகைய குற்றங்கள் செய்யாமல் இருப்பர்.


Dharmavaan
மார் 03, 2025 06:52

இன்டர்போல் என்பது ன்மையா ஏமாற்று வேலையா ஏன் கோர்ட்டில் டைம் லிமிட் வாங்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை